மத்திய பிரதேச இடைத்தேர்தல்! காணொலி காட்சி பிரசார உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி தடை !

மத்திய பிரதேசத்தில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில், காணொலி காட்சி பிரசார உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது.
மத்திய பிரதேசம் மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த சிவராஜ் சிங் சௌகான் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வருகிறது.கடந்த 4 மாதங்களில் மட்டும் கங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 25 சட்ட மன்ற உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகினனர். இதனால் அம்மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த கமல்நாத் ஆட்சி கவிழ்ந்தது. மேலும், 2 சட்டமன்ற உறுர்கள் இறந்து போனதால் 27 இடங்கள் காலியானதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
காலியாக உள்ள 27 தொகுதிகளுக்கு நவம்பர் மாதம் 3-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க. அரசு பெரும்பான்மை பெற இந்த தேர்தலில் வெற்றி உதவும் என்பதால், அங்கு பாஜக கடும் போட்டியை ஏற்படுத்தியுள்ளது.இந்த நிலையில், கொரோனா பரவல் காரணாக, மத்திய பிரதேச இடைத்தேர்தலில் அரசியல் கட்சிகள், நேரடி பிரசாரம் செய்ய தயக்கம் காட்டி வந்தது. மேலும், அதற்கு பதிலாக காணொலி காட்சி வாயிலாக பிரசாரம் செய்ய அம்மாநில உயர்நீதிமன்றம் அனுமதி வழங்கி உத்தரவிட்டது
இந்த உத்தரவை எதிர்த்து, பா.ஜ.க., சார்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இது தொடர்பான மனுக்கள், உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.எம்.கன்வில்கர் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தன.
அப்போது, அரசியல் கட்சிகள் காணொலி மூலம் பிரசாரம் செய்யலாம் என்ற மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கு நீதிபதிகள் அதிரடியாக தடை விதித்தனர்.
மேலும் கொரோனா காலத்தை மனதில் வைத்து, அரசியல் கட்சிகள் பிரசார கூட்டம் நடத்துவது பற்றி சரியான முடிவை எடுக்க வேண்டும் என தேர்தல் கமிஷனுக்கு உத்தரவிட்டனர்.