மதுவால் வந்த விபரீதம் !! போதையில் சக நண்பனை பாட்டிலால் குத்தி கொலை செய்த நண்பர்கள்...

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே உள்ள முள்ளிபள்ளம் பகுதி மயான திடலில் வாலிபர் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடப்பதாக காடுபட்டி காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி உடற்கூராய்வுக்காக மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். போலீசார் விசாரணை நடத்தியதில் கொலை செய்யப்பட்டவர் முள்ளிப்பள்ளம் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் (19) என்பதும் ,
இவரும் இவரது சக நண்பர்களான கோபாலகிருஷ்ணன், சாரங்கன் ஆகிய மூவரும் ஒன்றாக மயான திடலில் அமர்ந்து மது அருந்திய போது ஏற்பட்ட தகராறில் ஸ்ரீதர் என்பவரை பீர் பாட்டிலால் தலை முகம் ,
கழுத்து என உடலில் பல்வேறு இடங்களில் தாக்கி கொலை செய்தாக கூறப்படுகிறது. இதனிடையே கோபாலகிருஷ்ணன், சாரங்கன் என இருவரையும் காடுபட்டி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கொலை செய்யப்பட்ட ஸ்ரீதர் மீது வாடிப்பட்டி, சோழவந்தான் காவல் நிலையத்தில் பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.