1. Home
  2. தமிழ்நாடு

மாதவரம் - கிளாம்பாக்கம் ரூ. 40... மாதவரத்தில் இருந்து இயக்கப்படும் பஸ்களின் கட்டண விவரம் வெளியீடு..!

1

கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட்ட பேருந்துகள், ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படுகின்றன. இதனால் வடசென்னை பகுதிகளில் உள்ள மக்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பயணம் மேற்கொள்வதில் சிரமத்தை சந்தித்தனர். இந்த நிலையில் வடசென்னை மக்களின் வசதிக்காக தென் மாவட்டங்களுக்கு செல்ல 20 சதவீத பேருந்துகளை மாதவரம் பேருந்து நிலையத்தில் இருந்து அமைச்சர் சிவசங்கர் நேற்று தொடக்கிவைத்தார்.

மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து திருச்சிக்கு 18, சேலத்துக்கு 17, விருத்தாசலத்துக்கு 6, கள்ளக்குறிச்சிக்கு 16, விழுப்புரத்துக்கு 16, கும்பகோணத்துக்கு 14, சிதம்பரத்துக்கு 5, நெய்வேலிக்கு 11, கடலூா் வழியாக புதுச்சேரி, திண்டிவனத்துக்கு 5, புதுச்சேரிக்கு திண்டிவனம் வழியாக 10, செஞ்சி வழியாக திருவண்ணாமலைக்கு 22, போளூா் மற்றும் வந்தவாசி ஊா்களுக்கு 20 என மொத்தம் 160 பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இந்த நிலையில் மாதவரத்தில் இருந்து இயக்கப்படும் பேருந்துகளின் கட்டண விவரம் வெளியிடப்பட்டுள்ளது. மாதவரம் - கிளாம்பாக்கம் ரூ. 40, ரெட்டேரி - கிளாம்பாக்கம் ரூ. 35, அம்பத்தூர் - கிளாம்பாக்கம் ரூ. 30, மதுரவாயல் - கிளாம்பாக்கம் ரூ. 25, பெருங்களத்தூர் - கிளாம்பாக்கம் ரூ. 10 வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கத்தில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு வழக்கமாக வசூலிக்கப்படும் கட்டணத்துடன் சேர்த்து இந்தக் கட்டணமும் வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like