வைரலாகும் மாதம்பட்டி ரங்கராஜ் லிப் லாக் வீடியோ!
மாதம்பட்டி ரங்கராஜுக்கும் தனக்கும் திருமணம் ஆகி விட்டது என்றும் தான் 6 மாதங்கள் கர்ப்பமாக இருக்கிறேன் என்றும் காஸ்ட்யூம் டிசைனர் ஜாய் கிரிஸில்டா என்பவர் தெரிவித்திருந்தார். இது சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியது. முதல் மனைவி ஸ்ருதி இருக்கையில் எப்படி மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது மனைவியை திருமணம் செய்து குழந்தையும் கொடுக்க முடியும் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இதற்கிடையில் மாதம்பட்டி ரங்கராஜ் தனது முதல் மனைவி ஸ்ருதியுடன் ஓர் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்ட புகைப்படம் வெளியானது. இதுவும் ரசிகர்களை குழப்பத்தில் ஆழ்த்தியது. இந்த நிலையில், என்னுடைய கணவர் எடிட் செய்தது என ஒரு வீடியோவை வெளியிட்டிருக்கிறார் ஜாய் கிரிஸில்டா. இது சோஷியல் மீடியாவையே அதிரச் செய்திருக்கிறது.
அந்த வீடியோ பல புகைப்படங்கள் கொண்டதாக இருக்கிறது. அதில் மாதம்பட்டி ரங்கராஜ் ஜாய் கிரிஸில்டாவுக்கு உதட்டில் முத்தம் கொடுத்த போட்டோவும் உள்ளது. இதேபோல் அவர்கள் கட்டிப்பிடித்தபடி இருக்கும் புகைப்படங்கள் உள்ளிட்ட பல அந்த வீடியோவில் இடம் பிடித்திருக்கிறது. இது தற்போது சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவி வருகிறது.
❤️ edited by husband @MadhampattyRR #madhampattyrangaraj pic.twitter.com/KzUj0ieVw2
— Joy Crizildaa (@joy_stylist) August 19, 2025