1. Home
  2. தமிழ்நாடு

கர்ப்பமாக்கி ஏமாற்றிய மாதம்பட்டி ரங்கராஜ்? ஜாய் கிரிசில்டா புகார்..!

1

மாதம்பட்டி ரங்கராஜ், தன்னை கர்ப்பமாக்கி ஏமாற்றிவிட்டதாக, பிரபல ஆடை வடிவமைப்பாளரான ஜாய் கிரிசில்டா, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில், “சென்னையில் கோயிலில் வைத்து  தன்னை திருமணம் செய்து கொண்ட ரங்கராஜ் சேர்ந்து வாழ மறுக்கிறார்” என குற்றம்சாட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. திருமணம் செய்து கொள்வதாக கூறி கர்ப்பமாக்கி விட்டு தன்னுடன் சேர்ந்து வாழாமல் ஏமாற்றிவிட்டதாக குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

மாதம்பட்டி ரங்கராஜ் ஏற்கான்வே ஸ்ருதி என்பவரை திருமணம் செய்து, தனது இரண்டு மகன்களுடன் சேர்ந்து வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் தான், அவர் வேறொரு பெண்ணுடன் உறவில் இருப்பதாக தகவல்கள் கசிந்தன. யாரும் எதிர்பாராத விதமாக, ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டதாக இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்களை ஹாய் அண்மையில் சமூக வலைதளத்தில் வெளியிட்டார். தொடர்ந்து அடுத்த சில தினங்களிலேயே நாங்கள் 6 மாத கர்ப்பமாக இருப்பதாக அறிவித்து அதிர்ச்சி கொடுத்தார்.

தொடர்ந்து தனது நிறைமாத கர்பத்தை வெளிப்படுத்தும் விதமான புகைப்படங்களையும், மருத்துவமனையில் பரிசோதனைக்கு சென்றது, தனது குழந்தைக்கு ராஹா என பெயர் சூட்டி இருக்கிறேன் என்பது தொடர்பான புகைப்படங்களையும் வெளியிட்டார். மேலும், ரங்கராஜ் உடன் பல்வேறு நேரங்களில் இருந்தபோது எடுத்த புகைப்படங்களையும் சமூக வலைதளங்களிலும் பதிவிட்டார். அதேநேரத்தில், இதுகுறித்து எதுவும் பேசாமல் அமைதி காத்து வந்த ரங்கராஜ், தனது மனைவி ஸ்ருதியுடன் சில நிகழ்ச்சிகளில் பங்கேற்ற புகைப்படங்கள் வெளியாக பேசுபொருளாகின. இந்நிலையில் தான், மாதம்பட்டி ரங்கராஜ் தன்னை ஏமாற்றிவிட்டதாக, காவல்துறையில் ஜாய் கிரிசில்டா புகாரளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like