ஆண் குழந்தைக்கு தந்தையானார் மாதம்பட்டி ரங்கராஜ்...!
பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஜாய் கிரிசில்டா கடந்த ஆண்டே ரங்கராஜ் தன்னை திருமணம் செய்து ஏமாற்றியதாக குற்றச்சாட்டு வெளியிட்டிருந்தார். தங்களுக்கிடையே 2023ல் திருமணம் நடைபெற்றதாகவும் அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் அவர் காவல்துறையில் புகார் அளித்தார். மேலும், ரங்கராஜ் தன்னிடமிருந்து விலகிச் சென்றதாகவும், தனது கர்ப்ப காலத்தில் எந்தப் பொறுப்பையும் ஏற்கவில்லை என்றும் குற்றம் சாட்டியிருந்தார்.
அத்துடன், “ரங்கராஜால் பல முறை கருவுற்று, அவரின் வற்புறுத்தலால் கருக்கலைப்பும் செய்தேன்” எனவும் சமூக வலைதளங்களில் பதிவு வெளியிட்டிருந்தார்.
பின்னர் ஜாய் கிரிசில்டா சென்னை குடும்பநல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அதில், “தற்போது நான் 7 மாத கர்ப்பிணியாக உள்ளேன்; எனது வயிற்றில் வளரும் குழந்தைக்கு ரங்கராஜ் தந்தை. தற்போது வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளதால், மருத்துவச் செலவு, வீட்டு வாடகை உள்ளிட்ட தேவைகளுக்காக மாதம் ரூ.6.50 லட்சம் பராமரிப்பு தொகை வழங்க உத்தரவிட வேண்டும்” எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் நிலையில், ஜாய் கிரிசில்டா நேற்று இரவு ஆண் குழந்தைக்கு பிறந்துள்ளார். மகளிர் ஆணையம் மற்றும் காவல்துறை விசாரணை நடைபெற்று வரும் சூழலில் குழந்தை பிறந்தது குறிப்பிடத்தக்கது.
தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக ஜாய் கிரிசில்டா இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். அதில், மாதம்பட்டி ரங்கராஜ் மற்றும் எனக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கூறியுள்ளார்.