காதலரை அறிமுகம் செய்த மாமன்னன் பட நடிகை!
2012ம் ஆண்டு வெளியான சாட்டை படத்தின் மூலம் டப்பிங் கலைஞராக அறிமுகமான ரவீனா தமிழ், தெலுங்கு, மலையாள சினிமாவில் பல்வேறு வெற்றி படங்களுக்கு டப்பிங் பேசியுள்ளார்.
அதன்பின் 2017 ஆம் ஆண்டு ஒரு கிடாயின் கருணை மனு படம்மூலம் ஹீரோயின் அவதாரம் எடுத்த ரவீனா ரவி, அதனைத் தொடர்ந்து லவ் டுடே, மாமன்னன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மலையாளத்தில் உருவான வாலாட்டி என்கிற திரைப்படத்தில் நடித்தபோது, அப்படத்தின் இயக்குனர் தேவன் ஜெயக்குமாருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது.
தற்போது முதல்முறையாகத் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலருடன் உள்ள புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார். இந்தக் காதல் ஜோடிக்கு ரசிகர்கள் தங்களது வாழ்த்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.