1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் வருகிறது லூனா ஸ்கூட்டர்...எப்போ தெரியுமா ?

1

2024 ஆம் ஆண்டு பிப்ரவரியில் இ-லூனா என்ற மல்டி யுடிலிட்டி e2W ஸ்கூட்டர் புதிய எலக்ட்ரிக் அவதாரத்தில் கைனடிக் கிரீன் என்ற பெயரில் அறிமுகமாகிறது. இது லூனாவின் அபிமானிகள் குறிப்பாக மூத்த குடிமக்கள் மத்தியில் மிகப் பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.பெரிய மெட்ரோ நகரங்களில் மட்டுமல்லாமல் சிறு நகரங்களில் உள்ள சாலைகளிலும் எளிதாக செல்லும் வகையில் அமைந்துள்ளது. இது கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கும் ஏற்றதாக உள்ளது.

இ லூனா மாடலின் ஒட்டுமொத்த தோற்றம் அதன் முந்தைய வெர்ஷனை தழுவியே இருக்கும். இதில் வட்ட வடிவம் கொண்ட ஹெட்லைட், ஸ்ப்லிட் ரக சீட் வழங்கப்படுகிறது. புதிய இ லூனா மாடலில் எல்.சி.டி. கிளஸ்டர் வழங்கப்படுகிறது.

இதில் வழங்கப்படும் பேட்டரி மற்றும் மோட்டார் பற்றிய விவரங்கள் மர்மமாகவே உள்ளது. இந்த மாடலில் டெலிஸ்கோபிக் முன்புற ஃபோர்க்குகள், டூயல் ரியர் ஸ்ப்ரிங்குகள் வழங்கப்படுகின்றன. பிரேக்கிங்கிற்கு டிரம் பிரேக்குகள் வழங்கப்படுகின்றன.

இ லூனாவின் எக்ஸ் ஷோரூம் விலை ரூ.74,990. ஆனால் பிளிப்கார்ட் இதை தள்ளுபடி போக ரூ.71,990க்கு அளிக்கிறது. ஓஷன் புளூ, மல்பெர்ரி ரெட் ஆகிய இரு நிறங்களில் இ லூனா அறிமுகமாகிறது. ஒரு சார்ஜில் 110 கி.மீ. வரை செல்லலாம். 2 கி.வாட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. வரும் 7-ம் தேதி அறிமுகமான பிறகே வாகனத்தின் இதர அம்சங்கள் வெளியாகும்.

கைனடிக் கிரீன் எனர்ஜி மற்றும் பவர் சொல்யூஷன்ஸ் சார்பில் இந்த வாகனம் சந்தையில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. மின்சார வாகன பிரிவில் தங்கள் நிறுவனத்துக்கு விற்பனை ரீதியாக இ-லூனா அறிமுகம் ஊக்கம் தரும் என அந்நிறுவனம் நம்புவதாக தெரிகிறது.

Trending News

Latest News

You May Like