1. Home
  2. தமிழ்நாடு

தீபாவளிக்கு ரிலீசாகும் லப்பர் பந்து, எங்கு எப்போது பார்க்கலாம்?

Q

தமிழ் சினிமாவில் எப்போதும் விளையாட்டு போட்டிகளை வைத்து எடுக்கப்படும் திரைப்படங்களுக்கு பொதுவாகவே நல்ல வரவேற்பு கிடைக்கும். அந்த வரிசையில் கிரிக்கெட் போட்டியை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருக்கும் படம் லப்பர் பந்து. இந்த படத்தை இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து எழுதி இயக்கி இருக்கிறார். இயக்குனர் தமிழரசன் பச்சமுத்து இதற்கு முன்னதாக நெஞ்சுக்கு நீதி, எப்.ஐ.ஆர் போன்ற படங்களை இயக்கியுள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாண், அட்டகத்தி தினேஷ், சஞ்சனா, பால சரவணன், காளி வெங்கட் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இந்த திரைப்படம், தமிழ் சினிமாவில் பெரிய ஸ்போர்ட்ஸ் டிராமா படமாக அமைந்துள்ளது என்று பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியான 'லப்பர் பந்து' திரைப்படம் கோலிவுட் சினிமாவில் 2024 ஆண்டின் வெற்றிகரமான படமாக மாறியுள்ளது. கம்மி பட்ஜெட்டில் உருவான இந்த படம் பெரிய அளவில் பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைத்தது. அதிகம் எதிர்பார்க்கப்பட்ட லப்பர் பந்து திரைப்படம் ஆரம்பத்தில் அக்டோபர் 18 ஆம் தேதி ஓடிடியில் வெளியிட திட்டமிடப்பட்டது.

இன்றும் லப்பர் பந்து படம் ஓடிக்கொண்டிருப்பதால் ஓடிடி ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டது. அந்த வரிசையில் தற்போது லப்பர் பந்து திரைப்படம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஓடிடியில் வெளியாக உள்ளது என்று தகவல் வெளியாகி உள்ளது.

லப்பர் பந்து திரைப்படம் வரும் அக்டோபர் 31-ந் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு ஒடிடி தளத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டரில் இந்த படம் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. 

W

Trending News

Latest News

You May Like