1. Home
  2. தமிழ்நாடு

புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி பதவியேற்றார்..!

1

இந்திய ராணுவத்தின் 29-வது ராணுவ தலைமை தளபதியாக ஜெனரல் மனோஜ் பாண்டே கடந்த மே 2022-ம் ஆண்டு பதவியேற்றார். அதற்கு முன், ஜெனரல் மனோஜ் பாண்டே துணை தளபதியாக இருந்தார். இவர் ராணுவத்தின் என்ஜினீயர்ஸ் படை பிரிவில் இருந்து ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற முதல் அதிகாரி என்பது குறிப்பிடத்தக்கது. 

இவர் ராணுவத்தின் கிழக்கு கட்டுப்பாட்டு மையம், அந்தமான் மற்றும் நிகோபார் கட்டுப்பாட்டு மையம் ஆகியவற்றிலும் தலைமை அதிகாரியாக பணியாற்றி உள்ளார். ராணுவ தளபதி மனோஜ் பாண்டே பதவிக்காலம் மே 31-ம் தேதியுடன் முடிவடைந்த நிலையில் அவருக்கு ஜூன் 30 வரை ஒரு மாதம் பதவி நீட்டிப்பு வழங்கப்பட்டது. 

மனோஜ் பாண்டே பதவிக்காலம் நேற்றுடன் முடிவடைந்த  நிலையில் தேசிய போர் நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.   

இந்த நிலையில், புதிய ராணுவ தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திரா திவேதி நேற்று பொறுப்பேற்றுக் கொண்டார். 

ராணுவத்தின் துணைத் தளபதியாக பணியாற்றி வந்த லெப்டினன்ட் ஜெனரல் உபேந்திர திவேதியை, அடுத்த ராணுவ தளபதியாக நியமித்து கடந்த 12-ம் தேதி மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

ராணுவ துணை தளபதியாக இருக்கும் லெப்டினன்ட் ஜெனரல் திவேதி, நாட்டின் 30-வது ராணுவ தலைமை தளபதியாவார். இவர் ராணுவத்தில் பல முக்கிய பதவிகளில் இருந்துள்ளார்.

Trending News

Latest News

You May Like