1. Home
  2. தமிழ்நாடு

சமையல் காஸ் சிலிண்டர் விலை ரூ.58 குறைப்பு!

Q

பெட்ரோல், டீசல் விலைகள் போன்று சமையல் காஸ் சிலிண்டர் விலையும் நிர்ணயம் செய்யப்படுகிறது. மாதம் தோறும் முதல் நாளில் இந்த விலைகள் நிர்ணயிக்கப்படுவது வழக்கம்.
அண்மைக்காலமாக காஸ் சிலிண்டர் விலை நிர்ணயத்தில் ஏற்ற, இறக்கங்கள் நிலவி வந்தன. இந் நிலையில், ஜூலை 1ம் தேதியான இன்று காஸ் சிலிண்டர் விலைகளில் மாற்றங்கள் கொண்டு வரப்பட்டு உள்ளன.
அதன்படி, வணிக பயன்பாட்டுக்கான காஸ் சிலிண்டர் விலையில் ரூ.58 குறைக்கப்பட்டு அறிவிப்பு வெளியாகி உள்ளது. பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றன.
கடந்த மாதம் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாடு காஸ் சிலிண்டர் விலை சென்னையில் ரூ.1881 ஆக இருந்தது. தற்போது அதில் ரூ.58 குறைக்கப்பட்டு ரூ. 1822 என விற்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வீடுகளில் பயன்படுத்தப்படும் சிலிண்டர் விலை எந்த மாற்றமும் இல்லை. 14.2 எடை கொண்ட சிலிண்டர் ரூ.868.50 என்றே உள்ளது.

Trending News

Latest News

You May Like