1. Home
  2. தமிழ்நாடு

லயோலா கல்லூரி கருத்துக்கணிப்பு வெளியீடு..!

Q

சென்னை லயோலா கல்லூரி முன்னாள் மாணவர்கள் உருவாக்கிய ipds 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கான பிந்தைய 543 தொகுதிகளில் எக்ஸிட் போல் கள ஆய்வு முடிவுகளை சென்னை சேப்பாக்கத்தில் உள்ள நிருபர்கள் சங்கத்தில் வெளியிட்டனர்..
அதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசிய ipds தலைவர் திருநாவுக்கரசு பேசுகையில்
தேசிய ஜனநாயக கூட்டணி 354 முதல் 372 தொகுதிகள் வரை வெற்றி பெற்று மத்தியில் ஆட்சி அமைக்கும் குறிப்பாக பாரதிய ஜனதா கட்சி மட்டும் 306 முதல் 320 வரை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்தார்..
இந்தியா கூட்டணி 108 முதல் 125 தொகுதிகள் வரை வெற்றி பெறும் எனவும் காங்கிரஸ் கட்சி மட்டும் 60 முதல் 73 தொகுதிகளில் தனித்து வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும்,
தமிழ்நாடு பொருத்தவரை திமுக கூட்டணி 34 முதல் 37 தொகுதிகள் வரை வெற்றி பெறும் எனவும் அதிமுக கூட்டணி 1 தொகுதிகள் வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாகவும் கூறினார்.
அதேபோல் பாஜகவை பொறுத்தவரை 1 முதல் 3 வரை வெற்றி பெற வாய்ப்பு இருப்பதாக கூறினார்..
மகாராஷ்டிரா மாநிலத்தில் 48 மக்களவை தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி 11 முதல் 15தொகுதிகளிலும், இந்தியா கூட்டணி 10 முதல் 21 தொகுதி வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது..
மத்திய பிரதேசத்தில் உள்ள 29 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 21 முதல் 27 தொகுதிகள் வரையிலும் காங்கிரஸ் கட்சி 2 முதல் 8 தொகுதிகள் வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் கூறினார்..
கேரளாவில் 20 மக்களவைத் தொகுதியில் பாஜக 1 முதல் 2 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 14 முதல் 16 வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்.
கர்நாடக மாநிலத்தில் மொத்தம் 28 மக்களவைத் தொகுதிகள் இருப்பதாகவும் அதில் பாஜக 14 முதல் 19 தொகுதிகளிலும், காங்கிரஸ் கட்சி 6 முதல் 13 வரை வெற்றி பெற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார்…
அதேபோல் குஜராத் மாநிலத்தில் இருக்க கூடிய 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறும் எனவும் கூறினார்.
உத்திரபிரதேசத்தில் இருக்கக்கூடிய 80 மக்களவைத் தொகுதிகளில் பாஜக 62 முதல் 72 வரை வெற்றி பெறும் எனவும் அதே போல் இந்தியா கூட்டணி 3 முதல் 15 வரை வெற்றி பெற வாய்ப்பு உள்ளதாகவும் கூறினார்..
புதுச்சேரி மக்களவைத் தொகுதிகளை பொறுத்தவரை இந்தியா கூட்டணி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணிக்கும் கடும் இழுபறி நீடித்து வருவதாக தெரிவித்தார்.

Trending News

Latest News

You May Like