அதிரடியாக குறைந்த கச்சா எண்ணெய் விலை! பெட்ரோல், டீசல் விலை குறையுமா ?
ஒரு நாளைக்கு 18-20 மில்லியன் லிட்டர் பெட்ரோல் தேவைப்படுகிறது. இதில் 40-50% இருசக்கர வாகனங்களுக்கும், 30-40% பயணிகள் வாகனங்களுக்கும், 10-20% வணிக வாகனங்களுக்கும், 5-10% விமானங்களுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இதே டீசலை எடுத்துக்கொண்டால், தோராயமாக ஒரு நாளைக்கு 48-52 மில்லியன் லிட்டர் தேவைப்படுகிறது. இதில், வணிக வாகனங்களுக்கு 50-60%, தொழில்துறை மற்றும் உற்பத்தி துறைக்கு 20-30%, விவசாயத்திற்கு 10-20%, பணிகள் வாகனங்களுக்கு 5-10% தேவை இருக்கிறது.
கடந்த சில நாட்களாகவே கச்சா எண்ணெய் விலை ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்த நிலையில் பெட்ரோல் டீசல் விலையில் எந்த விதமான மாற்றமும் இல்லாமல் இருந்தது. இந்த நிலையில் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவில் கச்சா எண்ணெய் விலை 70 டாலருக்கு கீழ் சரிந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.
ஒரு பீப்பாய் விலை 69.51 டாலர் என்ற விலையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் இதன் பலனை மத்திய அரசு, எண்ணெய் நிறுவனங்கள் மட்டும் அனுபவிக்காமல், மக்களுக்கும் அதன் பலனை தர வேண்டும் என்றும், பெட்ரோல், டீசல் விலையை இன்னும் குறைக்காமல் இருப்பது ஏன் என்ற கேள்வியையும் எதிர்க்கட்சிகள் எழுப்பி வருகின்றன.
இதனை அடுத்து கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக பெட்ரோல் டீசல் விலை குறையுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
கச்சா எண்ணெய் பேரலுக்கு 90 டாலராக இருந்தபோது விற்கப்பட்ட அதே விலையில்தான் தற்போதும் பெட்ரோல், டீசல் விற்பனை செய்யப்படுகிறது. எனவே கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி காரணமாக பெட்ரோல், டீசல் விலை குறையுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.