பெண்களின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த காதலன் ! - மோசடி திட்டம்..

பெண்களின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த காதலன் ! - மோசடி திட்டம்..

பெண்களின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்த காதலன் ! - மோசடி திட்டம்..
X

நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதில் சிறுமிகள் முதல் முதியோர்கள் வரை இக்கொடூரத்திற்கு ஆளாகின்றனர்.

அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் காசியின் காமலீலை வெளியாகி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது. அதேபோன்று உத்தரபிரதேசத்தில் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. 

சென்னையைச் சேர்ந்த பெண் மருத்துவர் அளித்த புகார் மூலம் காசியின் கொடூர முகம் வெளிச்சத்திற்கு வந்தது. அப்போன்று கடந்த மூன்றாம் தேதி பெண் அளித்த புகார் மூலம் உத்தரபிரதேசத்தின் கொடூரம் வெளிவந்துள்ளது. 

நொய்டாவில் பெண் அளித்த புகாரில் 5 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். முன்னாள் காதலியின் ஆபாச படங்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டதாக ஒருவர் கைதான நிலையில் மேலும் 4 பேரை பிடித்து விசாரித்து வருகின்றனர். மேலும் அவர்கள் நிறைய பெண்களின் ஆபாச படங்களை சமூக வலைதளங்கள் மூலம் சுமார் 500 பேருக்கு அனுப்பி உள்ளனர்.

ஆபாச படங்களை அனுப்பி அப்பெண்களிடம் இருந்து பணத்தை வசூல் செய்து வந்ததாகவும் புகார் கூறப்படுகிறது. ஆபாச படங்கள் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்ட மேற்கு வங்கத்தில் மறைந்திருந்த நிலையில், அங்கு வைத்து கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.  

newstm.in 

Next Story
Share it