1. Home
  2. தமிழ்நாடு

காதல் அமையும் ராசிகள்..!இதில் உங்க ராசி இருக்கா ?

1

கடக ராசியை சேர்ந்தவர்கள் இயல்பிலேயே மிகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாக இருப்பார்கள். குறிப்பாக இந்த ராசியை சேர்ந்த பெண்கள் மிகவும் இரக்க குணம் மற்றும் பிறர் மீது அன்பானவர்களாக இருப்பார்கள். தங்கள் வாழ்நாள் முழுவதும் புதிய உறவுகளை, நண்பர்களை உருவாக்க நினைப்பார்கள். மற்றவர்களின் உணர்வுகளைப் புரிந்து செயல்படக்கூடிய இவர்கள், தங்களிடம் யாரேனும் காதலை வெளிப்படுத்தும் போது, அந்த நபர் மீது எந்த ஒரு குறையும் இல்லாத பட்சத்தில் உடனே சரி என கூறிவிடுவார்கள்.

சிம்ம ராசியை சேர்ந்த பெண்கள் எந்த ஒரு சூழலையும் சிறப்பாக கையாளக் கூடியவர்கள். மேலும் ஒவ்வொரு செயலையும் ஆழமாக யோசித்துச் செயல்படக்கூடியவர்கள். தங்களின் செயல் மற்றும் உணர்வுகளை மிகவும் கவனமாக இருப்பார்கள். தங்களின் வார்த்தைகள் மட்டுமல்லாமல், தனக்கு பிடித்த நபர்களின் வார்த்தைகளுக்கு மதிப்பளிக்கக் கூடியவர்கள்.
அந்த வகையில் தனக்கு பிடித்த வகையில் உள்ள யாரேனும் ஒருவர், இவர்களிடம் காதலை வெளிப்படுத்தும் போது, அதை மகிழ்ச்சியாக உடனே ஏற்றுக் கொள்வார்கள்.

துலாம் ராசி சேர்ந்த நபர்களிடம் அர்ப்பணிப்பு குணம் அதிகமாக இருக்கும். இவர்கள் சுயமரியாதையாக இருக்க நினைப்பவர்கள். பிறர்க்கும் மதிப்பளிக்க கூடியவர்கள். அதனால் பிறரிடம் அன்பும், மரியாதையுடனும் செயல்படுவார்கள். இவர்கள் காதல் உறவு என்று வரும்போது, யாரும் இது அதில் தலையிட அனுமதிப்பதில்லை.
அதே சமயம் தனக்குப் பிடித்த நபரை காதலை வெளிப்படுத்தினால் அது மரியாதையுடன் ஏற்றுக் கொள்ள நினைப்பார்கள். திருமண வாழ்க்கையில் தன் துணை மீது அன்பையும், மரியாதையையும் கொடுக்க நினைப்பார்கள்.

விருச்சிக ராசி காதல் விஷயத்தில் தங்களை அர்ப்பணித்துக் கொள்வார்கள். குறிப்பாக இந்த ராசி பெண்கள் காதல் விஷயத்தில் சம்மதத்தைத் தெரிவிக்க அதிக நேரம் எடுப்பதில்லை. தனக்கு ஏற்ற நபராக அமைந்துவிட்டால் உடனே சரி என்று சொல்லிவிடுவார்கள்.
மேலும் தன் துணையுடன் நேரத்தை செலவிடவும், பயணங்கள் செல்லவும் விரும்புவார்கள். செவ்வாய் கிரகத்தை அதிபதியாகக் கொண்ட ராசி என்பதால், இந்த ராசி பெண்கள் அதிகமாக கோபப்படுவார்கள். காதல் மற்றும் திருமண உறவில் மிகவும் தீவிரமாக இருப்பார்கள். உறவுகளை பராமரிப்பதில் கூடுதல் கவனம் செலுத்துவார்கள்.

மீன ராசியை சேர்ந்த பெண்கள் உள்ளுணர்வு மற்றும் கற்பனைத் திறன் அதிகமாக இருக்கும். இவர்கள் பிறர் மீது அதிகம் அக்கறை எடுத்துக் கொள்வார்கள். பிறரின் உணர்வுகளைப் புரிந்து செயல்படுவார்கள். இந்த ராசியை சேர்ந்த ஆண் மற்றும் பெண் காதல் மற்றும் திருமண உறவில் மிகவும் விசுவாசமான நபர்களாக இருப்பார்கள். இந்த ராசி சேர்ந்த பெண்கள் காதல் விஷயத்தில் மிகவும் குறும்புக்காரர்களாகவும் மற்றும் உறவைப் புதிதாக வைத்திருக்கும் நினைப்பார்கள்.

Trending News

Latest News

You May Like