1. Home
  2. தமிழ்நாடு

இன்ஸ்டா காதல்..!! காலையில் திருமணம்.. அன்றிரவே சிறுமியை ...

Q

தெலங்கானவை சேர்ந்த 17 வயது சிறுமிக்கு இன்ஸ்டாகிராம் மூலம் விக்னேஷ் என்ற 22 வயது வாலிபருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. முதலில் நட்பாக இருவரும் பழகி வந்துள்ளனா். பின்னர் அவர்கள் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. இருவரும் மணிக்கணக்கில் செல்போனில் பேசி வந்துள்ளனர்.

அப்போது சிறுமியை, விக்னேஷ் தனியாக அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இதையடுத்து சிறுமி தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி விக்னேசை வற்புறுத்தி உள்ளது. ஆனால் அதற்கு விக்னேஷ் மறுத்துள்ளார். மேலும் சிறுமியிடம் பேசுவதை நிறுத்தி உள்ளார். இதனால் தான் தற்கொலை செய்து கொள்ள உள்ளதாக சிறுமி, விக்னேஷை மிரட்டினாள்.

இதையடுத்து சிறுமியை வீட்டை விட்டு வரும்படியும், அப்படி வந்தால் திருமணம் செய்து கொள்வதாகவும் விக்னேஷ் கூறி உள்ளார். அதை நம்பிய சிறுமியும், வீட்டைவிட்டு ஓடி வந்தாள். அதன்படி கோவில் ஒன்றில் வைத்து வின்னேஷ், சிறுமியை திருமணம் செய்துள்ளார். பின்னர் தனது நண்பர் வீட்டிற்கு சிறுமியை அழைத்து சென்றுள்ளார். அங்கு வைத்து சிறுமியை தலையணை கொண்டு அழுத்தி கொலை செய்துள்ளார்.

பின்னர் தனது நண்பர், அவரது மனைவி ஆகியோர் உதவியுடன் சிறுமியின் உடலை அருகில் உள்ள தொழிற்சாலை குப்பை கிடங்கில் வீசி உள்ளார். 

இதையடுத்து மியாபூர் போலீசில் அவர்கள் புகார் அளித்தனா். அந்த புகாரின்போில் போலீசார் விக்னேஷை பிடித்து விசாரித்தனா். அப்போது அவர் சிறுமியை கொலை செய்ததை ஒப்பு கொண்டார்.

Trending News

Latest News

You May Like