ஆன்லைனில் தொடங்கி கர்ப்பத்தில் முடிந்த காதல்..!

தற்போதைய காலகட்டத்தில் என்னவென்று தெரிந்து கொள்ள , புரிந்து கொள்ளும் வயதிற்கு முன்னரே அனைவருக்கும் காதல் வந்துவிடுகிறது. அவர்கள் காதல் என்ற உணர்வை தவறாக புரிந்து கொண்டு இருக்கிறார்கள். அவர்களைப் பொறுத்தவரை காதல் என்றால் காமத்தோடு சேர்ந்த உடல் உறவே காதல் என்று தவறாக புரிந்து கொள்ளப்பட்டு இருக்கிறது.
அப்படி, ஆன்லைனில் தொடங்கி கர்ப்பத்தில் முடிந்த காதல் மகாராஷ்டிரா மாநிலத்தில் நடந்துள்ளது. அங்கு மும்பையைச் சேர்ந்த 16வயது பெண் ஒருவர் எப்போதும் ஆன்லைனிலேயே இருப்பார். அவர் முகநூலில் 18 வயது வாலிபர் ஒருவருடன் கால நேரம் தெரியாமல் மணிக்கணக்காக பேசிக் கொண்டே இருப்பார். அவர்களின் நட்பு காலப் போக்கில் காதலாக மாறியது.
இருவரும் நேரில் பார்த்துக் கொள்ள ஆசைப்பட்டனர். அதனால் ஒரு நாள் குறித்து, அந்த நாளில் தன் வீட்டில் யாரும் இல்லை என்று அந்த வாலிபர், அதன்ப பெண்ணை வரவழைத்தார். அந்தப் பெண்ணும் ஆசையில் அங்கு சென்றார். இருவரும் மிதமிஞ்சிய காதலால் உடலுறவு கொண்டனர். பிறகு அந்தப் பெண் தன் காதலனிடமிருந்து விடைபெற்றுக் கொண்டு தன் வீட்டிற்கு வந்து விட்டார். அதன் பின் மூன்று மாதங்கள் கழித்து காதலியின் உடலில் பல மாற்றங்கள் உருவானது.
அந்த முகநூல் காதலரோடு உறவு கொண்டதால் அவர் கர்ப்பமானார். மருத்துவரிடம் சென்று பரிசோதனை செய்து, கலைக்க முயற்சி செய்தபோது, நிலைமை கை மீறி போய்விட்டதென்றும், இனி கருவைக் கலைக்க முடியாது என்றும் மருத்துவர் கூறி விட்டார். வேறு வழியில்லாமல் காதலை ஓராண்டுக்குப் பிறகு ஒரு அழகான ஆண் குழந்தையை பெற்றெடுத்துள்ளார்.
இப்போது அந்தக் குழந்தையின் தந்தையும், தனது காதலனுமான அந்த வாலிபனை முகநூலில் தேடிக் கொண்டிருக்கிறார். அந்தப் பெண்ணின் விவகாரம், அந்தப் பெண்ணிற்கு பிரசவம் பார்த்த மருத்துவமனை மூலம் போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் தற்போது தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.