காதலித்து பதிவு திருமணம் !! பெண்ணை அடித்து தர , தர வென்று இழுத்து சென்ற பெற்றோர்கள் !! ஆணவக் கொலை என புகார்

காதலித்து பதிவு திருமணம் !! பெண்ணை அடித்து தர , தர வென்று இழுத்து சென்ற பெற்றோர்கள் !! ஆணவக் கொலை என புகார்

காதலித்து பதிவு திருமணம் !! பெண்ணை அடித்து தர , தர வென்று இழுத்து சென்ற பெற்றோர்கள் !! ஆணவக் கொலை என புகார்
X

கோவை துடியலூர் இடையர்பாளையத்தை சேர்ந்தவர் கார்த்திகேயன். இவர் சக்தி தமிழனி பிரபா என்பவரை காதலித்தார். இருவருமே வேறு வேறு சாதி என்பதால் , பெண்ணின் வீட்டில் எதிர்ப்பு கிளம்பியது.

அதனால் வீட்டை விட்டு வெளியேறி கடந்த 5 ம் தேதி 2 பேரும் கோவையில் சாதி மறுப்பு சுயமரியாதை கல்யாணம் செய்து கொண்டனர். கார்த்திகேயன் வீட்டில் அவ்வளவாக எதிர்ப்பு இல்லை. ஆனால் தமிழனி வீட்டில் கொந்தளித்து விட்டனர்.

இதனால் எப்படியும் தங்களது எதிர்ப்பு வரும் கிளம்பியதால், மாவட்ட பதிவாளர் ஆபீசில் ரிஜஸ்தர் செய்து கொண்டனர். பிறகு ஒரு வீடு எடுத்து தம்பதி வசிக்கவும் ஆரம்பித்தனர். கடந்த வெள்ளிக்கிழமை இரவு தமிழினியின் பெற்றோரும் , சொந்தக்காரர்களும் கார்த்திகேயனின் வீட்டிற்கு வந்தனர்.

திடீரென அவர்களை பார்த்ததும் தம்பதிக்கு எதுவுமே புரியவில்லை. அடுத்த நிமிஷமே கார்த்திகேயனையும் , அவரது அம்மாவையும் தாக்கி விட்டு , மகளை தாங்கள் வந்த காரில் கடத்தி சென்றனர்.

இந்த சம்பவம் அனைத்தும் அங்கிருந்த சிசிடிவி காட்சியில் பதிவாகினது. படுகாயமடைந்த வசந்தகுமாரி உடனடியாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். கார்த்திகேயன் நடந்த சம்பவம் குறித்து துடியலூர் ஸ்டேஷனில் புகார் தந்தார்.

மேலும் தன் மனைவியை ஆணவக் கொலை செய்து விடுவார்களோ என்று பயமாக உள்ளதாகவும் , மனைவியை எப்படியாவது மீட்டு தர வேண்டும் என்றும் புகார் மனுவில் தெரிவித்தார். இதையடுத்து துடியலூர் போலீசார் விசாரணையை ஆரம்பித்தனர்.

முதல் கட்டமாக அங்கிருந்த சிசிடிவி ஆய்வு செய்தனர். அப்போது மகளை பெற்றோர் அடித்து உதைத்து கடத்தி சென்றது பதிவாகி இருந்தது. இது சோஷியல் மீடியாவில் வைரலாகி வந்த நிலையில் , தற்போது மற்றொரு சிசிடிவி காட்சி வெளியாகி உள்ளது.

அதில் , நைட்டியுடன் மகளை தெருவில் இழுத்து கொண்டு வருகிறார்கள் பெற்றோர் தமிழினி அவர்களுடன் செல்ல மறுக்கவும், அவரது அம்மா , அம்மா இருவருமே சரமாரியாக அடிக்கிறார்கள்.

பெண்ணை இழுத்து செல்லும்போது , உறவினர்களும் செல்கிறார்கள். மேலும் கார்த்திகேயன் வீட்டிற்கு வெளியே நிற்கிறார்கள். இந்த வீடியோ வெளியாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Newstm.in

Next Story
Share it