1. Home
  2. தமிழ்நாடு

பேஸ்புக்கில் மலர்ந்த காதல்.. காரில் கடத்தி சிறுமியை சீரழித்த நண்பர்கள் !



கேரள மாநிலம் கோழிக்கோடு அருகேயுள்ள முக்கம் பகுதியை சேர்ந்தவர் 13 வயது சிறுமி பள்ளியில் 8ஆம் வகுப்பு படித்து வருகிறார். கொரோனா ஊரடங்கு காரணமாக வீட்டிலேயே இருந்த சிறுமி சமூக வலைத்தளங்களை பயன்படுத்த ஆரம்பித்துள்ளார்.

அப்போது பேஸ்புக் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டம் காமராஜ் நகரை சேர்ந்த தரணி(22) என்ற இளைஞர் சிறுமிக்கு அறிமுகமானார். பின்னர் இருவரும் சாட்டிங் செய்து வந்தனர்.
பேஸ்புக்கில் மலர்ந்த காதல்.. காரில் கடத்தி சிறுமியை சீரழித்த நண்பர்கள் !

பல நாட்களாக நீடித்த சாட்டிங் ஒருகட்டத்தில் காதலமாக மாறியது. இதனால் தினசரி வீடியோ கால், வாய்ஸ் கால் என இருவரும் மணிக்கணக்கில் பேச தொடங்கினர். பின்னர் நேரில் சந்திக்க திட்டம்போட்டனர். ஆனால் இளைஞர் தரணியின் ஆசை வேறுவிதமாக இருந்துள்ளது.

இதற்கிடையே, கடந்த சில நாட்களுக்கு முன்பு மாணவிக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டது. இதனையடுத்து அவரை அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு கேரளாவைச் சேர்ந்த விபின்ராஜ் (22) என்ற இளைஞருடன் நட்பு ஏற்பட்டது. அப்போது கிருஷ்ணகிரியில் இருக்கும் தனது காதலரை நேரில் பார்க்க உதவ முடியுமா என சிறுமி அவரிடம் கேட்டுள்ளார். இதற்கு விபின்ராஜ் கூறியிருக்கிறார்.

புதிய நண்பரை நம்பிய மாணவி கடந்த 2ஆம் தேதி கிருஷ்ணகிரிக்கு வருவதாக காதலனிடம் கூறினார். அதன்படி விபின்ராஜ் அவரது நண்பரான அஜித்ராஜ்(23), ஜோபியன் (23) ஆகியோர் ஒரு காரில் அழைத்துச் சென்றனர்.

கார் வேகமாக சென்ற நிலையில் திடீரென சாலையில் இருந்து இறங்கி மக்கள் நடமாட்டம் இல்லாத ஒரு மறைவான இடத்திற்கு சென்றது. அங்கு திடீரென சிறுமியை மிரட்டி காருக்கு உள்ளேயே 3 பேரும் சேர்ந்து கூட்டுபாலியல் பலாத்காரம் செய்தனர்.

பேஸ்புக்கில் மலர்ந்த காதல்.. காரில் கடத்தி சிறுமியை சீரழித்த நண்பர்கள் !

பின்னர், ஓசூர் பேருந்து நிலையத்தில் விட்டு விட்டு திரும்பி சென்றுவிட்டனர். அனாதையாக நின்ற மாணவி காதலன் தரணிக்கு தகவல் கொடுத்துள்ளார். உடனே காதலன் வந்து மாணவியை தனது வீட்டுக்கு அழைத்து சென்றுவிட்டார்.

இதனிடையே, மாணவியை காணாததால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்து பல இடங்களுக்கு சென்று தேடினர். எங்கும் கிடைக்காததால் போலீசில் புகார் செய்துள்ளனர். போலீசார் மாணவியின் செல்போன் டவர் அடிப்படையில் விசாரித்தபோது அவர் கிருஷ்ணகிரியில் இருப்பது தெரியவந்தது.

பின்னர் அங்கு விரைந்த போலீசார் மாணவியை மீட்டனர். அவரது காதலன் தரணியையும் கைது செய்தனர். அதன் பின்னரே 3 பேர் தன்னை பாலியல் பலாத்காரம் செய்ததாக சிறுமி பெற்றோரிடம் கூறினார். பின்னர் அவை தொடர்பாக தனியாக புகார் அளிக்கப்பட்ட நிலையில் விபின்ராஜ், அகித்ராஜ், ஜோபின் ஆகிய 3 பேரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

newstm.in

Trending News

Latest News

You May Like