1. Home
  2. தமிழ்நாடு

எங்கேயும் காதல்... சீன பெண்ணை கரம்பிடித்த தேனி இளைஞர்..!

1

தேனியை சேர்ந்தவர்கள் அமுதன்- சரவணகுமாரி தம்பதி. இவர்களது மகன் தருண்ராஜ், அமெரிக்காவில் உள்ள ஐடி நிறுவனத்தில் மேலாளராக பணிபுரிந்து வந்துள்ளார். 

இந்த நிலையில், அதே நிறுவனத்தில் பணிபுரியும் சீனாவைச் சேர்ந்த ஸ்னோ ஜூ என்ற பெண்ணை காதலித்து வந்த நிலையில், இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தனர். அமெரிக்காவில் இருவருக்கும் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், இருவரும் தமிழ் முறைப்படியான திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்த நிலையில், தருண்ராஜ் - ஸ்னோ ஜூ தம்பதி, நேற்று (செப்.15) மாப்பிள்ளையின் பூர்விக கிராமமான தேனி அருகே அம்மச்சியாபுரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் பாரம்பரிய முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இந்த திருமண நிகழ்வில் பெண்ணின் தந்தை, தமிழரின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டை அணிந்து கொண்டு திருமணத்தில் கலந்து கொண்டார். அவர்களுடன் மாப்பிள்ளையின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களுடன் புகைப்படம் எடுத்து மகிழ்ச்சி அடைந்தனர்.

Trending News

Latest News

You May Like