1. Home
  2. தமிழ்நாடு

தமிழ்நாட்டில் தாமரை மலராது.. மீனவர்கள் போராட்டத்தில் கனிமொழி ஆவேசம்..!

1

மீனவர்கள் பிரச்சனைக்கு மத்திய அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரத்தில் திமுக சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் திமுக எம்பி கனிமொழி கலந்து கொண்டார்.



அப்போது பேசிய அவர், பாஜக ஆட்சிக்கு வந்த இந்த 10 ஆண்டுகளில் பாஜக ஆட்சிக்கு வந்த பிறகு 3000க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக கூறினார். மேலும் இதுவரை 97 மீனவர்கள் இலங்கை சிறையில் அடைக்கப்பட்டு கஷ்டபட்டுக் கொண்டிருக்கிறார்கள். என்ம் இந்த ஆண்டில் இன்று வரை 77 பேர் இலங்கை சிறையில் உள்ளனர் என்றும் தெரிவித்தார்.

இதற்கு மத்திய அரசு என்ன செய்யப்போகிறது என்றும் கேள்வி எழுப்பியுள் கனிமொழி ஒவ்வொரு முறையும் இந்த பிரச்சனையை நாடாளுமன்றத்தை எழுப்பும்போது மத்திய அரசு சார்பில் எந்த பதிலும் சொல்லப்படுவதில்லை என்றும் குற்றம்சாட்டினார். மேலும் பேசிய அவர், தமிழ்நாட்டில் தாமரையே மலராது, பாஜகவினர் கடல் தாமரை போராட்டம் நடத்தினார்கள், சுஷ்மா சுவராஜ் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் கடலில் தாமரையை விட்டார்கள் பின்னர் தாமரையும் இல்லை அவர்களும் இல்லை என்றார்.

மேலும் மும்மொழிக் கொள்கை குறித்து பேசிய கனிமொழி, மொழி கொள்கை என்பது மக்களின் உரிமை என்றும் மாநிலங்களின் உரிமைகளை மத்திய அரசு மதிக்க வேண்டும் என்றும் கூறினார். மத்திய அரசு என்ன சொன்னாலும் அதனை மாநில அரசு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற மனப்பான்மையை மத்திய அரசு கைவிட வேண்டும். எந்த மொழியை படிக்க வேண்டும் என்பதை தமிழக மக்கள் முடிவு செய்வார்கள் என்றும் கனிமொழி கூறினார்.

மக்களை பிரிக்கும் வகையில் மத்திய அரசு செயல்படுவதாகவும், பத்திரிக்கை சுதந்திரத்தை பறிப்பதாகவும் கனிமொழி குற்றம்சாட்டினார். அமெரிக்காவில் இந்தியர்களுக்கு கைவிலங்கிட்டப்போது பிரதமர் மோடி அமைதியாக இருந்தார் என்றும் மீனவர்கள் பிரச்சனையிலும் பிரதமர் மோடி அமைதியாக இருக்கிறார் என்றும் கனிமொழி விமர்சனம் செய்தார்.

Trending News

Latest News

You May Like