1. Home
  2. தமிழ்நாடு

முதல் முறையாக ஒடிஷாவில் மலரும் தாமரை..!

1

ஒடிஷா மாநிலத்தை காங்கிரசும், பிஜு ஜனதா தளமும் அதிக முறை மாறி மாறி ஆட்சி செய்து வந்தன. இந்நிலையில், முதல் முறையாக அங்கு பாஜகவின் ஆட்சி உதயமாகிறது.

மக்களவைத் தேர்தலோடு ஒடிசாவில் 147 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட்டது. ஒடிசாவில் 63.46 சதவீத வாக்குகள் பதிவானது. பாஜக மற்றும் பிஜு ஜனதா தளம் (பிஜேடி) இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. 24 ஆண்டுகளாக ஒடிசாவில் ஆட்சியில் இருக்கும் பிஜேடி ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பாஜக தீவிர பிரச்சாரம் மேற்கொண்டதால் ஒடிசா தேர்தல் களம் நாட்டில் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது

தற்போதைய ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் போட்டியிடும் இரண்டு தொகுதிகளில், காந்தபாஞ்சியில் அவர் 521 வாக்குகள் வித்தியாசத்தில் லேசான பின்னடைவைச் சந்தித்துள்ளார். அந்த தொகுதியில் பாஜகவின் லக்‌ஷ்மண் பக் முந்தியுள்ளார். ஒடிசா சட்டசபை தேர்தலில் நவீன் பட்நாயக் தலைமையிலான அரசில் பதவி வகித்து வந்த அமைச்சர்கள் பலர் பின்னடைவைச் சந்தித்துள்ளனர். ஒடிசாவில் ஆட்சி அமைக்க 74 தொகுதிகளில் வெல்ல வேண்டும். பெரும்பான்மை தொகுதிகளை நோக்கி பாஜக முன்னேறி வருகிறது.

மண்ணின் மைந்தன் அல்லாதோர் ஒடிஷாவை ஆளலாமா என தமிழரான வி.கே.பாண்டியனை குறிவைத்து மோடியும், அமித் ஷாவும் பிரசார களமாடியது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like