வாழப்பாடி அருகே தனியார் பேருந்து மீது லாரி மோதி விபத்து..! 20 பேர் படுகாயம்..!

சேலத்தில் இருந்து கள்ளக்குறிச்சி நோக்கி தனியார் பேருந்து ஒன்று வியாழக்கிழமை காலை 10 மணியளவில் சேலம் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் வாழப்பாடி வழியாக சென்று கொண்டிருந்தது.வாழப்பாடி அடுத்த பெரிய கிருஷ்ணாபுரம் அருகே சென்றபோது, திடீரென சாலையில் குறுக்கிட்ட லாரி, பேருந்து மீது பலமாக மோதியது.
இந்த விபத்தில், பேருந்து ஓட்டுநர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். 10 பேர் லேசான காயமுற்றனர்.படுகாயமடைந்தவர்களை மீட்ட அப்பகுதி மக்கள் மற்றும் போலீஸார் அவசர சிகிச்சை வாகனத்தில், வாழப்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்தால் சேலம்- சென்னை தேசிய நெடுஞ்சாலையில், ஒரு மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. நெடுஞ்சாலை போக்குவரத்து ரோந்து மற்றும் ஏத்தாப்பூர் போலீஸார், விபத்தில் சிக்கிய வாகனங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீரமைத்தனர். இந்த விபத்து குறித்து ஏத்தாப்பூர் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.