1. Home
  2. தமிழ்நாடு

எங்களிடம் எப்படி இருந்தவர் இன்றைக்கு பலாப்பழத்தை தூக்கிக்கொண்டு நிற்கக்கூடிய காட்சியை பாருங்கள் - செல்லூர் கே ராஜூ தாக்கு..!

1

மதுரை பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் டாக்டர் சரவணனுக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ.தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வரக்கூடிய நிலையில் நேற்று மதுரை ரேஸ் கோர்ஸ் மைதானம் பகுதியில் உள்ள விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்களை சந்தித்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். 

பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. நிருபர்களிடம் கூறியதாவது-மதுரை நாடாளுமன்றத் தேர்தலில் இறுதி கட்ட பிரச்சாரம் தற்போது நிலவி கொண்டிருக்கிறது. நாளை (இன்று ) மாலை 6 மணியோடு இந்த பிரச்சாரம் முடிவடைகிறது. இந்த நாடாளுமன்ற தேர்தலில் ஒரு வித்தியாசமாக மக்களுடைய ஒட்டுமொத்த நம்பிக்கையை பெற்ற கூட்டணியாக அதிமுக தலைமையிலான கூட்டணி இருக்கிறது என்பதில் மாற்று கருத்து எதுவும் இல்லை நாங்கள் வாக்காளரை சந்திக்கும் போது எங்கள் தலைமையிலான கூட்டணி கட்சியான தேசிய முற்போக்கு திராவிடர் கழகம், கேப்டன் அவர்களுடைய கட்சியும் அதே போல அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் எங்களுக்கு பெரிய வரமாக கிடைத்த சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா மற்றும் புதிய தமிழகம் மருது சேனை மற்றும் 11 அமைப்புகள் இன்றைக்கு எங்களுடைய கூட்டணியை ஆதரித்து உள்ளார்கள். 

குறிப்பாக மதுரை பொருத்தமட்டில் ஒரு மிகப்பெரிய அரசியல் களம். இந்த களம் தமிழ்நாட்டில் எதிரொலிக்கும் என்பது ஒரு வரலாற்று உண்மை.எதுவாக இருந்தாலும் குறிப்பாக சினிமா நாடகம் அரசியல் என மதுரை மண்  ஒரு செண்டிமெண்டாக இருக்கக்கூடிய ஒரு தளம். எனவே இந்த தேர்தலில் நாங்கள் பார்த்தது முதல் தொடக்கமே மிக அற்புதமாக அமைந்தது.மக்கள் எல்லோருமே மனமுவந்து அதிமுக ஆட்சி வரவேண்டும் அவர்கள் மக்களுக்கு நல்லது செய்த ஆட்சி தான் அதிமுக என்று என்ன தொடங்கி விட்டார்கள்.இந்த மூன்று ஆண்டுகளில் அவர்கள் பட்ட வேதனைகளை அவர்கள் புரிந்து இருக்கிறார்கள். 

நமது வேட்பாளருடைய பண்பு அனைவருக்கும் தெரியும். இவர் பல்வேறு தன்னார்வத் தொண்டுகள் செய்து வருகிறார். மதுரையில் ஏராளமான பொதுமக்களுக்கு மாற்றுத்திறனாளிகளுக்கு கை கால் உள்ளிட்ட உபகரணங்களை வழங்கி இருக்கிறார்.மருத்துவ சேவை செய்து வருகிறார் அவருக்கு தான் வாக்களிக்க வேண்டும் என்று மக்கள் பேசி வருகிறார்கள். எங்களை எதிர்த்து நிற்கக் கூடிய வேட்பாளர் மிகவும்வீக்கான ஒரு வேட்பாளராக உள்ளார். எங்களை எதிர்த்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தரப்பில் நிறுத்தப்பட்டுள்ளார் தற்பொழுது அவர் திமுக தொண்டர்களை கூட குறிப்பாக அவரை உயர்த்துவிட்ட நாடாளுமன்ற தற்போது அவரிடத்தில் சரக்கு இல்லை செட்டியார் முறுக்கும் இல்லை.கூட்டணியில் வலுவில்லை மக்கள் அவரை புறக்கணிக்கிறார்கள். 

சரக்கும் சூப்பர் சரக்கு எங்களது வேட்பாளர் மருத்துவர் சூப்பர் சரக்கு எங்களது புரட்சித்தமிழரும் முருக்கானவர்.ஒரு இரண்டு ஆளுங்கட்சியை எதிர்த்து களத்தில் நிற்கின்றார்.இவருக்கு பாரதிய ஜனதா ராம சீனிவாசன் அவர்கள் பேசி வருகிறார். தமிழகத்தில் நன்றாக மாட்டிக்கொண்ட ஆடாக (அண்ணாமலை )இருக்கிறார்.ஒரு பக்கம் சிங்கம் ஒரு பக்கம் சிறுத்தை இந்த சிறுத்தைக்கும் சிங்கக்கும் இடையே மாட்டிக் கொண்ட ஆட்டுக்குட்டியாக அவர் இருக்கிறார். என்ன பேசுகின்றோம் என்பது தெரியாமல் பிதற்றிக் கொண்டிருக்கிறார்.எனவே இதில் வெற்றி பெறப்போவது மக்களுடைய நம்பிக்கையை பெற்ற மக்களுடைய அபரிதமான ஆதரவை பெற்று இருக்கின்ற எங்களுடைய டாக்டர் சரவணன் இரட்டை இலை என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

இங்கே எங்களிடம் எப்படி இருந்தவர் எப்படி இருந்த மனுஷன் இன்றைக்கு பலாப்பழத்தை தூக்கிக்கொண்டு அவர் நிற்கக்கூடிய காட்சியை பாருங்கள் பலாப்பழம் பழுக்காது அழுகித்தான் போகும்.உண்மையிலேயே மனசாட்சி  இல்லாமல்ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக தன்மானம் ரோஷம் எல்லாத்தையும் விட்டுவிட்டு ஓபிஎஸ் போய் ?. ஓபிஎஸ் - அவரை உலகத்துக்கு தெரிகின்றது என்றால் நாட்டுக்கு தெரிகின்றது என்றால் ஊடகங்களை மூன்று முறை முதலமைச்சராக இருந்தவர் என்று செய்தி வரக்கூடிய வழியில் அதற்கு காரணம் யார் அந்த தலைமையை கொச்சைப்படுத்திய அண்ணாமலையுடன் நின்று கைகூப்பி வாக்கு சேகரித்து வருகிறார்.சே என்று ஏளனமாக பேசி முடித்தார். இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like