1. Home
  2. தமிழ்நாடு

மிக கொடிய விஷம் கொண்ட பாம்பு தண்ணீர் குடிக்கும் அழகை பாருங்க !! வீடியோ !

மிக கொடிய விஷம் கொண்ட பாம்பு தண்ணீர் குடிக்கும் அழகை பாருங்க !! வீடியோ !


சமூக வலைதளங்களில் விலங்குகள் தொடர்பான வீடியோக்கள் எப்போதும் வைரலாவது வழக்கம். அதிலும் குறிப்பாக பாம்பு தொடர்பான வீடியோ என்றால் அது ஒரு வித அச்ச உணர்வுடன் வைரலாகுகிறது. அந்தவகையில் தற்போது மீண்டும் கொடிய விஷம் கொண்ட ஒரு கருப்பு நாகம் தண்ணீர் அருந்தும் வீடியோ வைரலாகி வருகிறது

பெரும்பாலும், சப்-சஹாரன் ஆப்ரிக்கா பகுதியில் மட்டுமே காணப்படுகிறது இந்த கருமை நிற கோப்ரா வகை பாம்பு. சுமார் 3.9 அடி முதல் 7 அடி நீளம் வரையிலும் வளரக் கூடியது.

மிக கொடிய விஷம் கொண்ட பாம்பு தண்ணீர் குடிக்கும் அழகை பாருங்க !! வீடியோ !

வடிவேலு பாணியில் சொன்னால், இது ரொம்பவே டெர்ரர் காட்டக் கூடிய பாம்பு ஆகும். ஒருவேளை உங்களால் அதற்கு ஆபத்து என தோன்றினால், அந்த நேரத்தில் நீங்கள் எவ்வளவு தூரத்தில் தள்ளி நின்றாலும் கூட தப்பிக்க முடியாது. ஏனென்றால் இது 23 அடி தூரம் வரையில் தனது விஷத்தை துப்பும் தன்மை கொண்டது.

இந்த கோப்ராவின் விஷம் தோளில் பட்டால் வீக்கம், கொப்பளம், அரிப்பு போன்ற பிரச்சினைகள் ஏற்படும். கண்ணில் விஷம் பட்டால், உடனடியாக நீக்கவில்லை என்றால் பார்வை பறி போகும். எனினும், நேரடியாக கடிக்கவில்லை என்றால் உயிருக்கு ஆபத்து இருக்காது. ஆனால் கடித்தால் உடனே மரணம் தான்.

இப்படியொரு கொடூர குணம் கொண்ட கருமை நிற கோப்ரா பாம்புதான், சாதுபோல தண்ணீர் குடித்துக் கொண்டிருக்கிறது. இந்த வீடியோவை ராயல் பைதான் என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது..

newstm.in

Trending News

Latest News

You May Like