1. Home
  2. தமிழ்நாடு

எப்படி எல்லாம் திருடுறாங்க பாருங்க : என் டார்கெட் வைஃபை கார்டுகள் மட்டும் தான்..!

1

சென்னையை சேர்ந்தவர் கார்த்திக். இவரின் ஏடிஎம் தொலைந்து விட்டது என்றும் அவரது கணக்கில் ரூ.11,870 தொகையை மூன்று தவணைகளில் யாரோ ஒருவர் எடுத்தது குறித்த குறுந்தகவல் மட்டும் கிடைத்துள்ளது காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 

அந்தப் புகாரின் அடிப்படையில் 27 வயது ஸ்ரீவாசலு என்பவரை காவல்துறை அதிகாரிகள் கைது செய்து விசாரித்தனர். அந்த விசாரணையில், அவர் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்தவர் என்பதும் முன்னாள் வங்கி ஊழியர் என்பதும் தெரியவந்தது. அந்த ஆடவரிடம் இருந்து 64 ஏடிஎம் அட்டைகள், நான்கு கைப்பேசிகள், கையடக்கக் கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஆந்திராவிலேயே என்ஜினியரிங் படித்தவிட்டு, அம்மாநில தனியார் வாங்கி ஒன்றில் டேட்டா ஆப்ரேட்டராக ஒரு வருடம் பணியாற்றி வந்திருக்கிறார். அப்போது ஏடிஎம் கார்டுகளை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்றும், அதிலிருந்து எந்தெந்த வழிகளில் பணம் எடுக்கலாம் என்பது குறித்தெல்லாம் நுணுக்கங்களை தெரிந்து கொண்டுள்ளார்.. பிறகு, அந்த பேங்க் வேலையை உதறித்தள்ளிவிட்டு, ஏடிஎம் மையங்களில் கஸ்டமர்கள் தவறவிடும் கார்டுகளை திருடி, அதன்மூலம் பணம் சம்பாதிக்க ஆரம்பித்துவிட்டார்.அந்த நபரிடம் இருந்து 64 ஏடிஎம் அட்டைகள், நான்கு கைப்பேசிகள், கையடக்கக் கணினி ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

ஏடிஎம் மையங்களில் வாடிக்கையாளர்கள் கவனக்குறைவாக விட்டுச் செல்லும் ஏடிஎம் அட்டைகளை வைத்து ஸ்வைபிங் மெஷின்கள் மூலம் குறிப்பிட்ட ஏடிஎம் கார்டுகளை பயன்படுத்தி பணத்தை எடுத்து இவர் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.குறிப்பாக, வைஃபை கார்டுகளை மட்டுமே குறிவைத்து ஸ்ரீவாசலு திருடியிருக்கிறார்.. அந்த கார்டுகளை, ஸ்வைப் மெஷின் இல்லாமல் டேப் செய்து பணத்தையும் அள்ளியிருக்கிறார்.சென்னை, திருப்பதி, பெங்களூர், ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் இது போன்ற ஏடிஎம் கார்டுகளை திருடி பணத்தை கொள்ளை அடித்து உல்லாச வாழ்க்கையை வாழ்ந்துள்ளது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.

ஸ்ரீவாசலு ரெட்டி, விசாரணைக்கு பிறகு, நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்படுவார் என்று காவல்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like