டெக்னாலஜி-ஐ எப்படி எல்லாம் பயன்படுத்துறாங்க பாருங்க : கடவுளுக்கு தீபம் காட்டும் இயந்திரம்..!

இந்துக்களின் வழிபாடான ஆயுத பூஜையை முன்னிட்டு இன்று வாழ்வில் தங்களுக்கு பெரிதும் பயன்படக்கூடிய பொருட்களையும் இல்லங்களில் உள்ள அனைத்து விதமான பொருட்களையும் தூய்மைப்படுத்தி அவற்றிற்கான வழிபாடு செய்து வணங்குவது ஆயுத பூஜை சிறப்பாகும்.
மனிதர்கள் வாழ்வில் கடினமான செயல்களை எளிதில் செய்யக்கூடிய வகையில் அரிய வகை கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து விஞ்ஞானத்தில் வளர்ந்து வருகின்றனர், இந்நிலையில் இறை வழிபாடு செய்வதற்கு இறைவனுக்கு தீபம் காண்பிக்கும் கருவியையும் கண்டுபிடித்து உள்ளனர். ஏற்கனவே கோவில்களில் மணி ஒலிப்பதற்கும், மேளம் வாசிப்பதற்கும் கருவிகள் கண்டுபிடித்து கோவில்களில் பயன்பாட்டில் உள்ளது. இந்நிலையில் தீபம் காண்பிக்கும் கருவியையும் புதிதாக கண்டுபிடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளனர்.
இந்த கண்டுபிடிப்பை ராமநாதபுரத்தை சேர்ந்த தனியார் நிறுவனமான ஆஸ்வெக் இன்ஃபோ கண்ட்ரோல்ஸ் என்ற நிறுவனம் கண்டுபிடித்து உள்ளது. இக்கருவி இறைவழிபாட்டிற்கு பயன்படும் என மகிழ்ச்சியோடு தெரிவித்தனர்.
இந்திய நாடு இறை நம்பிக்கையும், கடவுள் வழிபாடும் இன்றி அமையாது. எனவே இக்கண்டுபிடிப்பு கருவி கடவுள் வழிபாட்டிற்கு இனிவரும் காலங்களில் பயன்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.