1. Home
  2. தமிழ்நாடு

வாழ்க பாரதம்! வாழ்க பாரதத்தை நேசிக்கும் மக்கள்!

1

உங்கள் வீட்டிற்கு அருகில் கொட்டப்பட்ட குப்பைகள் அழுகிப் போய்க் கொண்டிருந்தால், உங்கள் குழந்தைகளுக்கு ஏதும் தொற்றுநோய் வந்து விடக் கூடாதென்று நகராட்சியைத் தொடர்பு கொண்டு சுத்தம் செய்யச் சொல்லி வற்புறுத்துவீர்கள். இல்லையா?

அப்படிச் செய்வதில் முதன்மையானது நம் சுயநலம் தான். ஆனால், அது அண்டை வீட்டுக் குழந்தைகளையும் பாதுகாக்கும். இதுபோன்ற சின்னச் சின்ன விசயங்களுக்கே மெனக்கெடும் நீங்கள், ஒரு விசயத்தைக் கவனிக்கத் தவறி விடுகிறீர்கள்.

இன்னும் சில காலங்கள் கழித்து உங்கள் தள்ளாத வயதில் உங்கள் மகளோ பேத்தியோ சில பயங்கரவாதக் கும்பல்களால், கற்பழித்துக் கொலை செய்து வீசப்படும் தருணம் வந்தால் என்ன செய்வீர்கள்? நீங்கள் எத்தனை சம்பாதித்து  வைத்திருந்தாலும், அது எந்த வகையிலும் உதவப் போவதில்லை. அன்றைக்கும் வந்து ஏதோவொரு சமூக வலைதளத்தில் உங்களுக்கு நேர்ந்ததை பதிவிட்டால் அப்பவும் நூற்றுக்கணக்கான லைக்குகளும் அனுதாபக் கமெண்ட்டுகளும் கிடைக்கும். போதுமா? மகிழ்வீர்களா?அப்பொழுது உங்களுக்கு காவல் நிலையம் தானே அடைக்கலம்?

நம்மைக் காப்பது நம் தேசம் தான். அதன் சக்கரங்களான முப்படைகளும், காவல்துறையும், நீதிமன்றமும் தான். நிர்வகிப்பதில் ஆயிரம் குறைகள் இருந்தாலும், அதைத் தட்டிக் கேட்க இந்த தேசம் உங்களுக்கு அதிகாரம் கொடுத்திருப்பதை யாரும்  மறுக்கவே முடியாது.  ஆனால், நம் தேசத்தை இகழும் அதிகாரம் இங்கே, இந்த மண்ணில் விளைந்த ஒரு பிடிசோற்றையாவது சாப்பிட்ட யாருக்கும் கிடையாது.

இந்த தேசத்தின் சட்டங்கள், எல்லாத்தரப்பு குடிமகன்களுக்கும் சமமாகவே இருக்கின்றன. ஆட்சி செய்பவர்களின்
தவறுகளுக்காகதேசத்தை நிந்திக்காதீர்கள். இது நம் பூமி, நம் முன்னோர்கள் ஆயிரக்கணக்கான ஆண்டுகள் வாழ்ந்த பூமி! நம் சந்ததியினர்கோடான கோடி ஆண்டுகள் வாழப் போகும் பூமி!

நாம் நம் தேசத்தை நேசிப்போம். நம் சந்ததிகள்இந்த புண்ணிய பூமியில் அமைதியாகவும், ஆனந்தமாகவும் வாழ வேண்டும் என்ற இயல்பான ஆசையில்,  இந்த தேசத்தையும் அதன் ஆன்மாவையும் காக்க விரும்புவோம். அதற்காக நாம் எந்த மட்டத்திலும் இறங்கலாம். எந்த உயரத்திற்கும் போகலாம்.

வந்தே மாதரம்!

நியூஸ்டிஎம் வாசகர்களுக்கு குடியரசு தின நல்வாழ்த்துகள்!

வாழ்க பாரதம்! வாழ்க பாரதத்தை நேசிக்கும் மக்கள்!

Trending News

Latest News

You May Like