மனைவியை விட்டு தனிமையில் வாழ்க்கை !! கால்கள் கட்டப்பட்ட நிலையில் , தலையில் ரத்த காயங்களுடன் இறந்து கிடந்த நபர்.

X

தஞ்சை மாவட்டம், கும்பகோணம் ஆனைக்காரன் பாளையத்தை சேர்ந்தவர் நீலமேகம். அவரது மகன் மோகன் (38). டிரைவராக இருந்து வருகிறார். இவரது மனைவி திருமணமான சில ஆண்டுகளிலேயே பிரிந்து சென்றுவிட்டார்.

மோகன் மட்டுமே தனிமையில் இருந்து வந்தார். இந்நிலையில் இன்று 3ம் தேதி தேனாம்படுகை கிராமத்தை கடந்து செல்லும் குடமுருட்டி ஆற்றங்கரையில் இறந்து கிடந்திருக்கிறார். மோகனின் கால்கள் கட்டப்பட்டும், தலையில் ரத்த காயங்களுடன், ஆடைகள் களைக்கப்பட்டு ஜட்டியோடு கிடந்தார்.

இதைக்கண்ட அந்த பகுதியினர் வி.ஏ.ஓ. முனீஸ்வர முரளியிடம் கூறினர். அவர் அளித்த புகாரின் பேரில் பட்டீஸ்வரம் போலீஸார் சென்று மோகனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். மோகனை வேறு எங்காவது கொலை செய்து இங்கே கொண்டு வந்து போட்டுள்ளார்களா ? அல்லது தேனாம்படுகையில் வைத்து கொலை செய்தனரா ,

யார் கொலை செய்தது, அவருடைய எதிரிகள் யார் என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Newstm.in

Next Story
Share it