1. Home
  2. தமிழ்நாடு

செம கூட்டணி : ரஜினியை இயக்கும் லோகேஷ் கனகராஜ்..!

1

ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘ஜெயிலர்’ படம் மிகப்பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. இந்தப் படத்தில் சிவ ராஜ்குமார், மோகன்லால் உள்ளிட்ட பல மொழிகளின் பிரபலங்களும் நடித்து இருந்ததால் அந்தந்த மாநிலங்களிலும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. 600 கோடி ரூபாய்க்கு மேல் வசூல் செய்ததாக தயாரிப்பு நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

இந்தப் படத்தின் வெற்றியை தொடர்ந்து, இயக்குநர் நெல்சன், நடிகர் ரஜினிகாந்த், இசையமைப்பாளர் அனிருத் போன்றோருக்கு தயாரிப்பாளர் கலாநிதிமாறன் விலையயர்ந்த கார்களை பரிசாக வழங்கினார். அதேபோல் படத்தில் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு தங்க நாணயம் ஒன்றும் பரிசாக வழங்கப்பட்டது.

Jailer

‘ஜெயிலர்’ படத்தைத் தொடர்ந்து ரஜினி நடிக்கும் 170-வது படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை ‘ஜெய் பீம்’ படத்தை இயக்கிய த.செ.ஞானவேல் இயக்கவுள்ளார். அனிருத் இசையமைக்கிறார். இப்படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், ரஜினி நடிக்கும் 171வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளதாக அதிகாரபூர்வ தகவல் வெளியாகியுள்ளது. இதனை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அன்பறிவு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றுகின்றார். இதனை சன்பிக்சர்ஸ் நிறுவனம் தனது எக்ஸ் தள பக்கத்தில் அறிவித்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பதாக தகவல் வெளியாகிவந்த நிலையில் தற்போது இது உறுதியாகியுள்ளது.

தற்போது விஜய் நடிப்பில் ‘லியோ’ படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி முடித்துள்ளார். வரும் அக்டோபர் 19-ம் தேதி இப்படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்துக்குப் பிறகு ரஜினி படத்துக்கான முதற்கட்ட பணிகள் தொடங்கப்படலாம் என்று கூறப்படுகிறது.


 

Trending News

Latest News

You May Like