1. Home
  2. தமிழ்நாடு

மீண்டும் சோஷியல் மீடியாவில் இருந்து பிரேக் எடுக்கும் லோகேஷ் கனகராஜ்..!

Q

மாநகரம் என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான லோகேஷ் கனகராஜ் தொடர்ந்து கைதி, மாஸ்டர் போன்ற படங்களை இயக்கி வெற்றிகண்டார். அவரின் வெற்றி படத்திற்கு படம் உயர்ந்துகொண்டே சென்றது. குறிப்பாக கமல்ஹாசனை வைத்து அவர் இயக்கிய விக்ரம் திரைப்படம் அவரை இந்தியளவில் பிரபலமாக்கியது.

அப்படத்தில் அவர் பயன்படுத்திய LCU டெக்னீக் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. விக்ரம் படத்திற்கு பிறகு லோகேஷ் கனகராஜின் இயக்கத்தில் நடிக்க இந்தியளவில் பல நடிகர்கள் ஆர்வம் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் லியோ என்ற திரைப்படத்தில் இணைந்தார் லோகேஷ். 2023 ஆம் ஆண்டு மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது.

இருந்தாலும் வசூலில் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது. லியோ படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் முதல் முறையாக ரஜினியுடன் இணைந்திருக்கிறார். ரஜினி மற்றும் லோகேஷ் கூட்டணியில் உருவாகும் கூலி திரைப்படத்தின் படப்பிடிப்பு எல்லாம் முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக போய்க்கொண்டு இருக்கின்றது.

ஆகஸ்ட் 14 ஆம் தேதி கூலி திரைப்படம் வெளியாகும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சோஷியல் மீடியாவில் ஆக்ட்டிவாக இருக்கும் லோகேஷ் கனகராஜ் அவ்வப்போது ஒரு சில முறை அதிலிருந்து பிரேக் எடுத்தும் இருக்கின்றார். இதற்கு முன்பு லியோ படத்தின் உருவாக்கத்தின் போது சோஷியல் மீடியாவில் இருந்து பிரேக் எடுத்த லோகேஷ் கனகராஜ் தற்போது மீண்டும் ஒருமுறை சோஷியல் மீடியாவில் இருந்து பிரேக் எடுக்க இருப்பதாக அறிவித்துள்ளார்.

கூலி திரைப்படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகள் தற்போது போய்க்கொண்டு இருக்கும் நிலையில் லோகேஷ் இந்த முடிவை எடுத்துள்ளார். மீண்டும் கூலி படத்தின் ப்ரோமோஷனின் போது சோஷியல் மீடியாவில் மீண்டும் இணைவாராம். அதுவரை பிரேக் எடுக்க இருப்பதாக அறிவித்திருக்கிறார் லோகேஷ் கனகராஜ்.

இந்நிலையில் ஏப்ரல் 14 ஆம் தேதியே கூலி திரைப்படத்தின் டீசர் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் அப்போதும் வெளியாகவில்லை. இதனைத்தொடர்ந்து எப்போது தான் கூலி டீசர் வெளியாகும் என ரசிகர்கள் கேள்விகேட்டு வருகின்றனர். படம் வெளியாக இன்னும் நான்கு மாதங்கள் இருக்கும் நிலையில் தற்போதைக்கு கூலி டீசர் வெளியாக வாய்ப்பில்லை என்றே தெரிகின்றது.


 


 

Trending News

Latest News

You May Like