லோகேஷ் கனகராஜ் ராமேஸ்வரத்தில் சாமி தரிசனம்..!!

தமிழகத்தில் ‘லியோ’ திரைப்படத்திற்கான முதல் காட்சியை காலை 09.00 மணிக்கு தான் திரையிட வேண்டும்; இறுதி காட்சி நள்ளிரவு 01.30 மணிக்கு முடிக்கப்பட வேண்டும்; ஆறு நாட்களுக்கு தினமும் ஐந்து காட்சிகள் மட்டுமே திரையிட வேண்டும்; உள்ளிட்ட அறிவிப்புகளை தமிழக அரசு வௌியிட்டுள்ளது. இருப்பினும், இது வரையிலும் படத்தை 4 மணிக்கு வெளியிடவும் தொடர்ந்து படக்குழு முயற்சித்து வருகிறது.
இந்நிலையில், நாளை திரைப்படம் வெளியாக உள்ளதால், இயக்குநர் லோகேஷ் கனகராஜ், ரத்னகுமார் உள்பட படக்குழுவினர் அனைவரும் ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இதற்கு முன்பு, விக்ரம் திரைப்படம் வெற்றி அடைய வேண்டி லோகேஷ் கனகராஜ் மற்றும் படக்குழுவினர் ராமேஸ்வரம் கோயிலுக்குச் சென்றது குறிப்பிடத்தக்கது.