1. Home
  2. தமிழ்நாடு

மக்களவைத் தேர்தல் 2024 : விஜய பிரபாகரன் தோல்வி..!

1

விருதுநகர் தொகுதியில் காலையில் இருந்து அதிமுக கூட்டணியில் தேமுதிக சார்பாக போட்டியிட்ட விஜய பிரபாகரன் முன்னணி வகித்து வந்த நிலையில் 8 மணி அளவில் வெளியான முடிவுபடி திமுகவின் கூட்டணியில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக போட்டியிட்ட மாணிக்கத் தாகூர் முன்னிலை வகிக்கிறார்.

இந்த தொகுதியில் திருப்பரங்குன்றம், திருமங்கலம், சாத்தூர், சிவகாசி, விருதுநகர், அருப்புக்கோட்டை என்று மொத்தம் ஆறு சட்டமன்ற தொகுதிகள் உள்ளது. அதோடு நான்கு தொகுதியில் திமுக மற்றும் கூட்டணி கட்சி எம்எல்ஏக்களும், இரண்டு அதிமுக எம்எல்ஏக்களும் இருக்கின்றனர். 8மணி அளவில் வெளியான முடிவுபடி சிட்டிங் காங்கிரஸ் எம்பியாக இருக்கும் மாணிக்கம் தாகூர் 382560 ஓட்டுகள் பெற்று முன்னிலையில் இருக்கிறார். தேமுதிகவின் விஜய பிரபாகரன் 377721 வாக்குகளும், பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக ராதிகா 163985 வாக்குகளும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கௌஷிக் 76039 வாக்குகளும் பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

8.44 Pm மணி நிலவரப்படி : விருதுநகர் தொகுதியில் 3,78,070 ஓட்டுகள் கடந்து 4601 ஓட்டுகள் வித்தியாசத்தில் விஜய பிரபாகரன் சற்று பின்னடைவு சந்தித்து வருகிறார்.

இந்நிலையில் விருதுநகர் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் நீண்ட இழுபறிக்கு பிறகு, சுமார் 4,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். காலையில் இருந்து மாறிமாறி முன்னிலை பெற்று வந்த நிலையில் தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன் தோல்வி அடைந்தார். 40 தொகுதிகளில் மிக குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வியடைந்தது இந்த தொகுதியில் தான்.


 

Trending News

Latest News

You May Like