1. Home
  2. தமிழ்நாடு

மக்களவை தேர்தல் பணி குறித்த வழிகாட்டு நெறிமுறை வெளியீடு ..!

1

மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுக்கு இந்திய தேர்தல் ஆணையம் சுற்றிக்கை அனுப்பியுள்ளது.அதில் தபால் வாக்கு சீட்டு தயாரிப்பு, கண்காணிப்பு தொடர்பாக பல்வேறு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி தபால் வாக்கு சீட்டுகள் தயார் செய்யும் பணியை கண்காணிக்க ஒரு உதவி தேர்தல் அதிகாரியை நியமிக்க வேண்டும். வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்பட்டவுடன் உடனே தபால் வாக்கு சீட்டுகளை அச்சடிக்கும் பணியை தொடங்க வேண்டும். தபால் வாக்கு சீட்டுகள் அச்சடிக்கும் பணியை மேற்கொள்ள அரசு அச்சகங்களுக்கு தான் முன்னரிமை வழங்க வேண்டும். இந்த மையங்களுக்கு தடையின்றி மின்சாரம் வழங்க வேண்டும்.

தபால் வாக்கு சீட்டு அச்சடிப்பதை கண்காணிக்க கட்சி வாரியாக ஏஜென்டுகளை நியமனம் செய்யலாம். தபால் சீட்டில் வேட்பாளரின் பெயர், சின்னம் வரிசை எண் உள்ளிட்டவற்றை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும். மேலும் ஒரு பண்டலுக்கு 50 வாக்கு சீட்டுகள் என்ற அடிப்படையில் கட்டிவைத்து அடையாள எண்களிட வேண்டும். அதன்பிறகு அச்சக பொறுப்பாளர் தபால் வாக்கு சீட்டுகளை உதவி தேர்தல் அதிகாரியிடம் போலீஸ் பாதுகாப்புடன் ஒப்படைக்க வேண்டும். தேர்தல் நடக்கும் வரை அந்த தபால் வாக்கு சீட்டுகள் இரும்பு பெட்டியில் தனி அறையில் வைக்கப்பட வேண்டும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like