லாக்டவுன் வதந்தி: தமிழக போலீஸ் விளக்கம்..!

“கொரோனா பரவல் காரணமான ஞாயிறன்று தமிழகம் முழுவதும் பொது முடக்கம்- அமைச்சர் மா.சுப்பிரமணி” என சமூக வலைதளங்களில் ஒரு போட்டோ பகிரப்படுகிறது. டிவி சேனலின் பிரேக்கிங் நியூஸ் வடிவில் இந்த போட்டோ பகிரப்பட்டு வருகிறது.
இந்த போட்டோவை ஷேர் செய்து, ஜூன் 22-ந் தேதி மதுரையில் நடைபெறும் முருகன் மாநாட்டுக்கு இடையூறு செய்யவே முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதாக சமூக வலைதளங்களில் சிலர் விமர்சனங்களையும் முன்வைத்துள்ளனர்.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசின் உண்மை சரிபார்ப்பகம் அளித்த விளக்கத்தில், 2022-ம் ஆண்டு ஜனவரி மாதம் கொரோனா பரவல் காரணமாக ஞாயிற்றுக்கிழமை பொது முடக்கம் அறிவிப்பதாக வெளியான செய்தியை தற்போது வெளியானது போல தவறாகப் பரப்பி வருகின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.