இணையத்தில் ட்ரெண்ட் ஆகும் Lockdown ஹேஷ்டேக்..! மீண்டும் லாக்டவுன் வருமா ?
கொரோனா வைரஸை போல சீனாவில் தான் முதன்முதலில் HMPV வைரஸ் குறித்த தகவல் மிகவும் சீரியசாக வெளிவந்தது. அதன்பிறகு சில நாடுகளில் தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்த சூழலில் இந்தியாவிலும் கால்தடம் பதித்துவிட்டது. குஜராத், கர்நாடகாவை தொடர்ந்து தமிழ்நாட்டிலும் வந்துவிட்டது.
இந்நிலையில் HMPV வைரஸ் சுவாசப் பாதிப்புகளை ஏற்படுத்துவதாக மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். சளி, இருமல், காய்ச்சல், உடல் சோர்வு ஆகிய அறிகுறிகள் மட்டுமே தென்படுகின்றன. பயப்படும் அளவிற்கு எதுவும் இல்லை. அதுமட்டுமின்றி இந்தியாவில் ஏற்கனவே பரவிய வைரஸ் தான் இது. எனவே பயப்பட வேண்டாம். ஒருசில நாட்கள் நீடிக்கும். அதன்பிறகு பாதிப்பு நீங்கிவிடும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் இந்த வைரஸ் தொடர்பான மீம்ஸ்கள் அனல்பறக்க ஆரம்பித்துள்ளன. மேலும் எக்ஸ் வலைதளத்தில் Lockdown டிரெண்டாக ஆரம்பித்துவிட்டது. மீண்டும் லாக்டவுன் போட்டால் என்ன செய்வது? எனக் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளனர். ஆனால் பலரது பதிவுகளில் நம்பிக்கையை பார்க்க முடிகிறது.
இன்றைய தினம் மும்பை மற்றும் தேசிய பங்குச்சந்தைகள் கடும் சரிவை கண்டன.கொரோனா தொற்று பரவல் தீவிரத்தின் போது அதை கட்டுப்படுத்த நாடு முழுவதும் லாக்டவுன் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தது. அதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.
தற்போது இந்த தொற்றும் சீனாவில் இருந்து உலகம் முழுவதும் பரவிவருவதால் மீண்டும் லாக்டவுனை சந்திக்க நேரிடுமோ என்ற அச்சம் மக்கள் மத்தியில் நிலவி வருகிறது. ஆனால், இது HMPV வைரஸ் குறித்து அச்சமோ, பீதியோ கொள்ள வேண்டாம் மத்திய அரசின் சுகாதார நிறுவனமான ஐசிஎம்ஆர் விளக்கம் கொடுத்துள்ளது.
இந்த HMPV வைரஸ் ஒன்றும் புதிய வைரஸ் அல்ல. 2001 ஒன்று முதலே கண்டறியப்பட்டு உலகம் முழுவதும் பரவியுள்ளது. தற்போதைய சூழலில் இது இந்தியாவில் தீவிரமாக பரவி அதிகரிக்கவில்லை. அரசும் தொடர்ந்து கண்காணித்து வருவதால் பொதுமக்கள் அச்சம் கொள்ள வேண்டியதில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது."