1. Home
  2. தமிழ்நாடு

தெருவில் உள்ள வீடுகளுக்கு பூட்டு.. திட்டம்போட்டு ரூ.62 லட்சம் கொள்ளையடித்த கும்பல் !

தெருவில் உள்ள வீடுகளுக்கு பூட்டு.. திட்டம்போட்டு ரூ.62 லட்சம் கொள்ளையடித்த கும்பல் !


சென்னை அயனாவரத்தைச் சேர்ந்த முனீர் பாஷா (44), மண்ணடியைச் சேர்ந்த முகம்மது ஏஜாஸ் (50) ஆகியோர் மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஆந்திரா ஆகிய மாநிலங்களிலிருந்து ஆடுகளை மொத்தமாக வாங்கி சென்னையில் உள்ள சில்லரை வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். 

புளியந்தோப்பு பகுதியில் உள்ள அலுவலகத்தில் வியாபாரிகளிடம் பணத்தை வசூல் செய்து அதை லாரிகள் மூலம் சம்பந்தப்பட்டவர்களுக்குக் கொடுத்து அனுப்பி வந்தனர்.
 
இந்நிலையில் ஊரடங்கு காரணமாக முனீர் பாஷா, முகம்மது ஏஜாஸ் ஆகியோர் வசூல் செய்த பணத்தை தங்களின் அலுவலகத்தில் பீரோவில் வைத்திருந்தனர். இந்நிலையில் இரவில் அலுவலகத்தின் பூட்டு உடைக்கப்பட்டு பீரோவிலிருந்த 61 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
தெருவில் உள்ள வீடுகளுக்கு பூட்டு.. திட்டம்போட்டு ரூ.62 லட்சம் கொள்ளையடித்த கும்பல் ! 
பின்னர், கொள்ளைச் சம்பவம் குறித்து புளியந்தோப்பு காவல் நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அங்கு விரைந்த போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் கொள்ளை நடந்த இடத்தின் அருகில் உள்ள வீடுகளின் வெளிப்புறத்தில் தாழ்பாள் போடப்பட்டுள்ளது. மேலும் கடப்பாரையால் பூட்டு உடைக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
 
இதுகுறித்து புளியந்தோப்பு போலீஸார் கூறுகையில்,  தற்போது லாரி உரிமையாளர்களுக்கு பணம்  வழங்காமல் பீரோவில் பணம் இருப்பதை தெரிந்தே  கொள்ளையர்கள் பீரோவை உடைத்துக் கொள்ளையடித்துள்ளனர். சம்பவம் நடந்த இடத்தில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்துவருகிறோம். சிசிடிவியில் 2 பேர் நோட்டமிடும் காட்சிகள் பதிவாகியுள்ளன.

கொள்ளையடிக்கும்போது அந்தப்பகுதியில் உள்ள மக்கள் வெளியில் வராமலிருக்க அவர்களின் வீடுகளுக்குப் பூட்டு போடப்பட்டுள்ளது. அதனால் முன்னெச்சரிக்கையாகக் கொள்ளையர்கள் திட்டம்போட்டுக் கொள்ளையடித்துள்ளனர்.

கொள்ளையர்களைப் பிடிக்கத் தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. கொள்ளையடிக்கப் பயன்படுத்திய கடப்பாரையைப் பறிமுதல் செய்துள்ளோம் என்றனர்.


newstm.in 


 

Trending News

Latest News

You May Like