1. Home
  2. தமிழ்நாடு

வரும் ஏப்ரல் 7ம் தேதி, 11ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

1

திருநெல்வேலி மாவட்டத்தில் ஏப்ரல் 11ஆம் தேதி வெள்ளிக் கிழமை பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.பங்குனி உத்திரம் திருநாளை முன்னிட்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேசமயம் அரசு பொதுத் தேர்வுகள் ஏதுமிருப்பின் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், பொதுத்தேர்வு நடைபெறும் பள்ளிகள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் ஆகியோருக்கு இந்த உள்ளுர் விடுமுறை பொருந்தாது என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


மேற்படி ஏப்ரல் 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை நாளன்று நடத்தப்படும் அரசு பொதுத் தேர்வுகள் அனைத்தும் எவ்வித மாறுதலுமின்றி நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஏப்ரல் 26ஆம் தேதி (மாதத்தின் 4ஆவது சனிக்கிழமை) வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு தமிழ் மாத பௌர்ணமிக்கும் ஒரு சிறப்பு உண்டு. அந்த வகையில் வைகாசி மாதம் பெளர்ணமி தினத்தை விசாகம் என்று கூறுவர். தை மாத பெளர்ணமியை தைப்பூசம் என்று கொண்டாடுகிறார்கள். பங்குனி மாத பெளர்ணமி பங்குனி உத்திரம் என்று அழைக்கப்படுகிறது.


முன்னதாக திருவாரூர் தியாகராஜர் கோயில் பங்குனி தேரோட்டத்தை முன்னிட்டு திருவாரூர் மாவட்டத்திற்கு இதே ஏப்ரல் 7 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து திருவாரூர் மாவட்ட ஆட்சியர் மோகன சந்திரன் உத்தரவிட்டார். அன்றைய தினம் நடைபெற இருந்த குறைதீர்க்கும் நாள் ஏப்ரல் 8ஆம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

உள்ளூர் விடுமுறையானது செலவாணி முறிச்சட்டம் 1881 (Under Negotiable Instrument Act-1881)-ன் கீழ் அறிவிக்கப்படவில்லை என்பதால் வங்கிகளுக்கு இவ்விடுமுறை பொருந்தாது. இம்மாவட்ட கருவூலம் மற்றும் அனைத்து சார்நிலைக் கருவூலங்களும் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பாக அவசரப் பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

அதே தினம் புதுக்கோட்டை நார்த்தாமலை முத்து மாரியம்மன் கோவில் தேரோட்டத்தை முன்னிட்டு புதுக்கோட்டை மாவட்டத்திற்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் பள்ளிகள், கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.புதுக்கோட்டை நார்த்தாமலை முத்துமாரியம்மன் கோவில் தேரோட்டம் திருவிழாவை முன்னிட்டு ஏப்ரல் 7ஆம் தேதி புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அருணா அறிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like