1. Home
  2. தமிழ்நாடு

இன்று இந்த 2 மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

1

தமிழகத்தின் கோவில் மாநகரமான மதுரையில் சித்திரை திருவிழா மிகவும் விமர்சையாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. மீனாட்சி அம்மனுக்கும் சிவனுக்கும் திருக்கல்யாணம் நடந்து முடிந்துள்ள நிலையில்  நேற்று மிகவும் சிறப்பாக தேரோட்டம் நடந்தது. இந்நிலையில் இன்று கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளும் நிகழ்வு நடைபெற உள்ளது.

இந்த திருவிழாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் மதுரையை நோக்கி படையெடுப்பார்கள். மேலும் உள்ளூர் மக்கள் அனைவரும் திருவிழாவில் கலந்து கொள்வார்கள். எனவே மதுரை மாவட்டத்திற்கு ஏப்ரல் 23ஆம் தேதியான நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதாகவும்,  இந்த விடுமுறை நாளை ஈடு செய்யும் வகையில் மே 11ம்  தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக இருக்கும் என்று மாவட்ட ஆட்சியர் சங்கீதா தெரிவித்துள்ளார்.

அதே போல், இன்று சித்ரா பவுர்ணமி கொண்டாடப்பட இருக்கிறது. அதனால் அன்றைய தினம் சில முக்கிய கோவில்களில் திருவிழாக்கள் நடைபெறும். அந்த வகையில் தேனி மாவட்டத்தில் உள்ள கண்ணகி கோவிலில் திருவிழா நடைபெற இருக்கிறது. அதனால் தேனி மாவட்டத்திற்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது. கண்ணகி கோவில் திருவிழா ஏற்பாடு குறித்து உத்தமபாளையம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. அதில் இது குறித்து முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் உள்ளூர் விடுமுறையில் அரசு கருவூல அலுவலகங்கள் குறிப்பிட்ட பணியாளர்களை கொண்டு இயங்கும். மற்ற அலுவலகங்கள் மூடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Trending News

Latest News

You May Like