1. Home
  2. தமிழ்நாடு

இந்த மாவட்டத்திற்கு ஏப்ரல் 7, 11-ம் தேதிகளில் உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

Q

தென்காசி மாவட்ட கலெக்டர் கமல் கிஷோர் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறியிருப்பதாவது:
தென்காசி மாவட்டம், காசிவிசுவநாதசுவாமி கோவில் குடமுழுக்கு விழா 2025 ஏப்ரல் 7ம் தேதியும் (திங்கள்கிழமை), பங்குனி உத்திர திருவிழா 2025 ஏப்ரல் 11ம் தேதியும் (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளதை முன்னிட்டு ஏப்ரல் 7, 11 ஆகிய இரண்டு நாட்கள் தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளில் நடைெபற்று வரும் பொதுத்தேர்வுகள் மற்றும் முக்கியத் தேர்வுகளுக்கு இடையூறு ஏற்படாத வகையில் அனைத்து மாநில அரசு அலுவலகங்களுக்கும், நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை நாட்களாக அறிவித்து ஆணையிடப்படுகிறது.
மேற்சொன்ன இரண்டு நாட்களில் அரசு பொதுத்தேர்வுகள் ஏதேனுமிருப்பின் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுத்தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது எனவும், மேலும் இம்மாவட்ட கருவூலம், சார்நிலைக்கருவூலங்கள் குறைந்தபட்ச பணியாளர்களை கொண்டு அரசு காப்புகள் (Government Securities) தொடர்பான அவசரப்பணிகளை கவனிப்பதற்காக செயல்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது. மேற்சொன்ன உள்ளூர் விடுமுறையை சரி செய்யும் வகையில் 2025 ஏப்ரல் 26 மற்றும் மே 3 ஆகிய இரு சனிக்கிழமைகளும் தென்காசி மாவட்டத்திற்கு வேலை நாட்களாக அறிவிக்கப்படுகிறது.
இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது. 

Trending News

Latest News

You May Like