தென்காசி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை..!

உலகப் புகழ் பெற்ற சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவிலில் நடப்பு ஆண்டு கொடியேற்றத்துடன் விழா நடந்து வருகிறது. திருவிழாவின் முக்கிய நாளான ஆடித்தபசு விழா நடப்பு ஆண்டில் ஜூலை 31ஆம் தேதி அன்று நடக்க உள்ளது. இத்தினத்தில் தமிழகம் முழுவதிலும் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிலுக்கு சாமியை தரிசனம் செய்ய வருவார்கள்.
இதனால் அங்கு பாதுகாப்பு மற்றும் முன்னேற்பாடு பணிகளாக ஜூலை 31ஆம் தேதி ஆகிய நாளை உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்படி நாளை தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்படுவதாகவும், மேலும் திட்டமிட்டபடி போட்டி தேர்வுகள் உள்ளிட்ட முக்கிய தேர்வுகளுக்கு எந்த வித பாதிப்பும் இல்லாமல் நடைபெறும்.
அதனால் மாநில அரசின் அனைத்து அலுவலகங்களுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கூடுதல் விடுமுறையின் காரணமாக பள்ளி, கல்லூரி மாணவர்கள் அனைவரும் மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்த நாளில் அரசு பொது தேர்வுகள் ஏதேனும் இருந்தால் சம்பந்தப்பட்ட தேர்வு எழுதும் பள்ளி மாணவர்கள், தேர்வு தொடர்பாக பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு இந்த உள்ளூர் விடுமுறையானது பொருந்தாது. இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் 19-8-2023 (சனிக்கிழமை) அன்று வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது.