1. Home
  2. தமிழ்நாடு

நாளை நீலகிரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு..!

1

மலைகளின் அரசி என அழைக்கப்படும் உதகைக்கு நாள்தோறும் சுற்றுலா பயணிகள் நீலகிரிக்கு வந்த போதிலும், ஏப்ரல், மே ஆகிய கோடை மாதங்களில் அதிகளவில் வருவது வழக்கம். சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், அவர்களை மகிழ்விக்கும் வகையிலும் ஆண்டுதோறும் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது. கோடை விழாவில் காய்கறி காட்சி, வாசனை திரவிய காட்சி, ரோஜா காட்சி, மலர்க்காட்சி, பழக்காட்சி உள்ளிட்டவை விமர்சையாக கொண்டாட்டப்பட்டு வருகிறது.

இந்நிலையில், கோடை சீசனை முன்னிட்டு ஊட்டி தாவரவியல் பூங்காவில் வரும் மே 10-ம் தேதி மலர் கண்காட்சி தொடங்க உள்ளது. இது பத்து நாட்கள் நடைபெறும். மலர் கண்காட்சியை முன்னிட்டு இதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

பல்வேறு வகைகளை கொண்ட 5 லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளது. ஊட்டி மலை ரயில், அலங்கார பணிகள் போன்றவை நடைபெறுகிறது. இந்த மலர் கண்காட்சியை காண பல்வேறு மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் ஊட்டிக்கு வருவார்கள். இதனால் மாவட்டமே விழா கோலம் பூண்டிருக்கும்.

126-வது மலர் கண்காட்சியை முன்னிட்டு நீலகிரி மாவட்டத்துக்கு மே 10ம் தேதி உள்ளுர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “நீலகிரி மாவட்டத்தில் எதிர்வரும் 10 - 05 - 2024 (வெள்ளிக் கிழமை) அன்று 126வது மலர் கண்காட்சி நடைபெற உள்ளது.இதனால் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. இந்த நாளில் மாவட்ட கருவூலம் மற்றும் சார்நிலை கருவூலகங்கள் அரசு பாதுகாப்புக்கான அவசர அலுவலகங்களை கவனிக்கும் பொருட்டு குறிப்பிடப்பட்ட பணியாளர்களுடன் செயல்படும்.மேற்கண்ட 10 - 05 - 2024 விடுமுறை நாளினை ஈடுசெய்ய எதிர்வரும் 18 - 05 - 2024 (சனி்கிழமை) அன்று இம்மாவட்டத்திற்கு பணி நாளாக இதன் மூலம் அறிவிக்கப்படுகிறது என மாவட்ட ஆட்சித் தலைவர் மு.அருணா தெரிவித்துள்ளார்.

Trending News

Latest News

You May Like