அங்கன்வாடியில் சமைத்த உணவில் பல்லி...குழந்தைகள் பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் அனுமதி!
பொள்ளாச்சி அடுத்த கொல்லப்பட்டி பகுதியில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகின்றது, மேலும் இந்த மையத்தில் நிதின் மற்றும் மிதுன் கிருஷ்ணா ஆகிய இரண்டு குழந்தைகள் பயின்று வருகின்றனர், அங்கு தடுப்பூசி செலுத்துவதற்காக தன்ஷிகா, சுஜா, தேவ பிரசாத், புகழ்மதி ஆகிய குழந்தைகள் வந்த நிலையில் அவர்களுக்கு மதிய உணவை அங்கன்வாடி பணியாளர் சிவகாமி மற்றும் செல்வநாயகி வழங்கி உள்ளனர்.
உணவு சமைத்த பாத்திரத்தில் பல்லி இறந்து கிடந்தது கண்டறியப்பட்டது, அதிர்ச்சி அடைந்த அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளை சாப்பிட விடாமல் தடுக்க சென்ற நிலையில் குழந்தைகள் சிறிதளவு உணவு சாப்பிட்ட நிலையில் வாந்தி ஏற்பட்டுள்ளது.
பதற்றம் அடைந்த அங்கன்வாடி பணியாளர்கள் குழந்தைகளை பெற்றோர்களின் உதவியுடன் மீட்டு பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர், குழந்தைகளுக்கு மருத்துவர்கள் சிகிச்சை வழங்கி வரும் நிலையில் குழந்தைகளை 4 மணி நேரம் கண்காணிப்பில் வைக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.
மருத்துவமனைக்கு வந்த ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் அங்கன்வாடி மையத்தில் பணிபுரிந்து வந்த சிவகாமி மற்றும் செல்வநாயகி ஆகிய இருவர் மீதும் துரை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார், இந்த சம்பவம் குறித்து நெகமம் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அங்கன்வாடி ஊழியர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அங்கன்வாடியில் குழந்தைகள் சாப்பிடும் உணவு பாத்திரத்தில் எதிர்பாராத விதமாக பல்லி விழுந்ததா அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா என்ற கோணத்தில் விசாரணையை தொடங்கியுள்ளனர்.
ஏராளமான குழந்தைகள் வந்து செல்லும் அங்கன்வாடி மையத்தில் ஊழியர்கள் அலட்சியமாக செயல்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது,