1. Home
  2. தமிழ்நாடு

லிவ் இன் ரிலேஷன்ஷிப்பில் கொடூரம்- ஸ்கூருட்ரைவரால் பெண்ணை கொன்ற காதலன்..!!

live in
உடலுறவுக்கு மறுத்த காதலியை காதலன் ஸ்கூருட்ரைவரால் கழுத்தில் குத்தி கொடூரமாகக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டெல்லியில் நடந்த ஷர்த்தா கொலை வழக்கு ஒட்டுமொத்த நாட்டையும் அதிர்ச்சி அடையச் செய்தது. அதனால் ஏற்பட்ட சோகம் அடங்குவதற்கு குருகிராம் பகுதியில் லிவ்இன்னில் இருந்த காதலி, தனது காதலனால் கொடூரமான முறையில் கொல்லப்பட்டுள்ளார்.

உத்தரப் பிரதேசம் கண்ணோஜ் பகுதியைச் சேர்ந்த சிவம்குமார் மற்றும் அதே இடத்தில் வசிக்கும் 28 வயது பெண்ணும் நெருங்கி பழகி வந்துள்ளனர். அது நாளிடைவில் காதலாக மாற, இருவரும் லிவ் இன் உறவுமுறையில் இருக்க முடிவு செய்தனர்.

அதற்காக ஒரு வாடகைக்கு வீடு எடுத்து இருவரும் ஒன்றாக வசிக்கத் தொடங்கியுள்ளனர். அப்போது தான் ஷிவம்குமாருக்கு ஏற்கனவே திருமணமாகியுள்ள விபரம் காதலிக்கு தெரியவந்தது. இதனால் இருவருக்குமிடையே சண்டை வந்துள்ளது.

அதன்காரணமாக காதலி ஒட்டுமொத்தமாக சிவம்குமாரிடம் இருந்து விலகியே இருந்துள்ளார். இது சிவம்குமாருக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தவே, நேற்று காதலியிடம் உடலுறவுக்கு தொடர்ந்து வற்புறுத்தியுள்ளார்.

காதலி திட்டவட்டமாக சிவம்குமாரின் ஆசைக்கு இணங்க மறுத்துவிட்டார். இதனால் ஆத்திரம் அடைந்த காதலர், அருகிலிருந்த ஸ்கூருட்ரைவரை எடுத்து காதலி கழுத்தில் பலமுறை குத்தி கொடூரமாகக் கொலை செய்தார். இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தெரியவந்ததை அடுத்து, அவர்கள் சிவம்குமாரை கைது செய்தனர். 

Trending News

Latest News

You May Like