“4 தலைமுறை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர்” : எஸ்பிபிக்கு கமல் இரங்கல்!
“4 தலைமுறை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர்” : எஸ்பிபிக்கு கமல் இரங்கல்!

எஸ்பிபியின் புகழ் ஏழு தலைமுறைக்கும் வாழும் என எஸ்பிபிக்கு நடிகர் கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்துள்ளார்.
எஸ்பிபியின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள கமல்ஹாசன், எஸ்பிபி தனது உடன்பிறவா அண்ணன் என தெரிவித்துள்ளார்.
அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது lனக்கு வாய்த்த பேறு எனக் கூறியுள்ள கமல், ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும் என குறிப்பிட்டுள்ளார். அது தொடர்பாக அவர் ட்விட்டரில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.
பல மொழிகளில் நான்கு தலைமுறை நாயகர்களின் குரலாக வாழ்ந்தவர் எஸ்பிபி என்று குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், ஏழு தலைமுறைக்கும் அவரது புகழ் வாழும் என தெரிவித்துள்ளார்.
அன்னைய்யா S.P.B அவர்களின் குரலின் நிழல் பதிப்பாக பல காலம் வாழ்ந்தது எனக்கு வாய்த்த பேறு.
— Kamal Haasan (@ikamalhaasan) September 25, 2020
ஏழு தலைமுறைக்கும் அவர் புகழ் வாழும். pic.twitter.com/9P4FGJSL4T
newstm.in