1. Home
  2. தமிழ்நாடு

LIVE : சமாதியில் வைக்கப்படும் பங்காரு அடிகளார் உடல்..!

1

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 82. 

செங்கல்பட்டு இல்லத்தில் வைக்கப்பட்டிருந்த பங்காரு அடிகளாரின் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக மேல்மருத்துவர் கோயில் வளாகத்தில் வைக்கப்பட்டது. அவரது உடலுக்கு ஏராளமான பக்தர்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேல்மருத்துவத்தூர் கோயில் தியான மண்டபம் அருகிலேயே கடந்த 2 வருடங்களுக்கு முன்பு கட்டப்பட்ட சமாதியில் அரசு மரியாதையுடன் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. பக்தர்கள் கூட்டம் அலைமோதும் நிலையில் பாதுகாப்புப் பணியில் 2,500 போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சமாதியில் வைக்கப்படும் பங்காரு அடிகளார் உடலுக்கு காவல்துறை மரியாதை ஆரம்பமாகியுள்ளது. 

Trending News

Latest News

You May Like