சீறிய மலைப்பாம்பு... கவ்விய சிறுத்தை.. இறுதியில் நடந்தது என்ன- திகிலூட்டும் வீடியோ !
வனப்பகுதியில் சிறுத்தைக்கும் மலைப்பாம்பிற்கும் இடையேயான மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
சமூக வலைதளங்களில் மக்களை வியக்க வைக்கும் வகையில் ஏராளமான வீடியோக்கள் பரவி வருகின்றனர். அதில் ஒருசில வீடியோக்கள் மக்கள் கவனத்தை பெற்று உலகளவில் வைரலாகும்.
அதிலும் பெரும் வனஉயிரினங்கள் தொடர்பான வீடியோக்கள் முக்கியத்துவம் பெறும். ஏனெனில் அரியவகை உயிரினங்கள் மற்றும் அதன் செயல்பாடுகளை நாம் அதிகம் பாத்திருக்க மாட்டோம் என்பதாலேயே ஆகும்.
அந்த வகையில் நேச்சர் இஸ் ஸ்கேரி என்ற ட்விட்டர் பக்கத்தில் பகிரப்பட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதில், அமைதியாக சென்றுகொண்டிருக்கும் மலைப்பாம்பை சிறுத்தை மெதுவாக அதன் பின்னால் சென்று அதன் கால்களால் முதலில் தாக்குகிறது. சுதாரித்துக்கொண்ட மலைப்பாம்பு பதிலுக்கு சிறுத்தையுடன் சீறி சண்டையிட முயல்கிறது.
ஆனால், உடனடியாக சிறுத்தை மலைப்பாம்பை வாயில் பிடித்து கடித்து கொன்று அதை சாப்பிட மேலே எடுத்துச் செல்கிறது. பதைபதைக்க வைக்கும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகிறது. யார் வெல்வார்கள் என்று எதிர்பார்ப்புடன் பார்க்க வைக்கிறது.
leopard attacks a python! 🐆🐍 pic.twitter.com/RCqM6SM9Xo
— Nature is Scary (@AmazingScaryVid) October 12, 2020
newstm.in