’சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு’ அன்புக்கரங்கள் திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் பதிவு..!
’சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு’ என்று அன்புக்கரங்கள் திட்டம் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.
பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதம்தோறும் ரூ.2,000 உதவித்தொகை வழங்கும் 'அன்புக் கரங்கள்' திட்டம் முதல்வரால் தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் குழந்தைகளின் பள்ளி, உயர்கல்வி செலவுகளையும் அரசே ஏற்கிறது.
இந்த நிலையில், அன்புக்கரங்கள் திட்டத்தின் மூலம் பயணடைந்த மாணவ, மாணவிகளின் வீடியோக்களை பகிர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டு இருப்பதாவது; “கல்விக்கான உதவிகளை வழங்குவதைக் கடந்தும், உறவாய் அரவணைத்து மகிழ்ச்சியை வழங்குவதே அன்புக்கரங்கள். இத்தகைய மகிழ்ச்சியை மற்ற குழந்தைகளுக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தினர் வழங்கிட வேண்டும். “சின்ன சின்ன அன்பில்தானே ஜீவன் இன்னும் இருக்கு.” இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.
.png)