1. Home
  2. தமிழ்நாடு

மக்களே நோட் பண்ணிக்கோங்க..! சென்னையில் இன்று இரவு 23 மேம்பாலங்கள் மூடல்..!

1

ஆங்கிலப்புத்தாண்டு முன்னிட்டு, சென்னை மெரினா கடற்கரை, எலியட் கடற்கரை, பிற பொழுது போக்கு இடங்களில் அதிக எண்ணிக்கையில் மக்கள் கூடுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

எனவே, விபத்து இல்லாத புத்தாண்டு கொண்டாடும் நோக்கில், போக்குவரத்து மாற்றங்களை சென்னை போலீசார் அறிவித்துள்ளனர்.
 

அதன்படி கடற்களை உட்புற சாலை டிச.,31 அன்று இரவு 7 மணி முதல் ஜன.,1 காலை 6 மணி போக்குவரத்துக்கு மூடப்படும். உட்புற சாலையில் நாளை இரவு 7 மணி முதல் வாகனங்கள் அனுமதிக்கப்படாது. அனைத்து வாகனங்களும் கலங்கரை விளக்கம் சந்திப்பு வழியாக மட்டுமே வெளியேற வேண்டும்.
 

காமராஜர் சாலை போர் நினைவிடம் முதல் கலங்கரை விளக்கம் வரை டிச.,31 இரவு 8 மணி முதல் ஜன.,1 காலை 6 மணி வரை வாகன போக்குவரத்துக்கு மூடப்படும்.அடையாறு பகுதியில் இருந்து காமராஜர் சாலைக்கு செல்லும் வாகனங்கள், கிரீன்வேஸ் சாலை, தெற்கு கால்வாய் சந்திப்பில் திருப்பி விடப்பட்டு மந்தவெளி ஆர்.ஏ.புரம் 2ம் மெயின் ரோடு, ஆர்.கே.மடம் ரோடு, லஸ் மயிலாப்பூர் வழியாக சென்று அவர்களது இலக்கை அடையலாம்.
 

எலியட் கடற்கரை: டிச.,31 இரவு 8 மணி முதல் ஜன.,1 காலை 6 மணி வரை 6ம் அவென்யூ நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படாது.
 

ஆங்கிலப்புத்தாண்டு முன்னிட்டு நாளை டிச.,31 இரவு 10 மணி முதல் ஜன.,1 காலை 6 மணி வரை, சென்னையில் போக்குவரத்து மூடப்படும் மேம்பாலங்கள் பட்டியல்!
 

1.மியூசிக் அகாடமி மேம்பாலம்
 

2.ஜி.ஆர்.எச்.மேம்பாலம்
 

3.பீட்டர்ஸ் சாலை மேம்பாலம்
 

4.ஆழ்வார்பேட்டை மேம்பாலம் நுழைவாயில்
 

5.காந்தி மண்டபம் மேம்பாலம்
 

6.இந்திரா நகர் யூ திருப்பம்
 

7.பாந்தியன் மேம்பாலம்
 

8.மகாலிங்கபுரம் மேம்பாலம்
 

9.ஜெமினி மேம்பாலம், ஜி.என்.செட்டி
 

10.ஜி.கே.எம்., மேம்பாலம்
 

11.வாணி மகால் மேம்பாலம்
 

12.உஸ்மான் மேம்பாலம்
 

13.சக்கரபாணி தெருவில் இருந்து ரெங்கராஜபுரம் மேம்பாலம்
 

14.மகாலிங்கபுரம் மேம்பாலம் தெற்கு
 

15.வடபழநி மேம்பாலம்
 

16.அடையார் மேம்பாலம்
 

17.வேளச்சேரி மேம்பாலம்
 

18.விமான நிலைய மேம்பாலம்
 

19.புதிய வள்ளலார் பாலம்
 

20.அண்ணா ஆர்ச் மேம்பாலம்
 

21.100 அடி சாலை மேம்பாலம்
 

22.திருமங்கலம் பாலம்
 

23.முரசொலி மாறன் மேம்பாலம்
 

புத்தாண்டை முன்னிட்டு அதிவேகமாக வாகனம் ஓட்டுதல், குடிபோதையில் வாகனம் ஓட்டுதல், ஆபத்தான முறையில் சாகச சவாரி செய்தல், ஒலி மாசு ஏற்படுத்துதல் கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை பெருநகர போலீசார் எச்சரித்துள்ளனர்.

Trending News

Latest News

You May Like