1. Home
  2. தமிழ்நாடு

சொல்றேன் கேளுங்க..! இவர் மட்டும் தேர்தலில் நின்னா டெபாசிட் கூட கிடைக்காது..!

1

தமிழகத்தில் முதல் கட்டத்திலேயே தேர்தல் நடைபெறுகிறது. இதனால் தமிழக அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை வேகப்படுத்தியுள்ளன. அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. 

பாஜக பொறுத்தவரை தங்கள் கூட்டணியில் இணைந்துள்ள பாமகவுக்கு 10 இடங்களை ஒதுக்கீடு செய்துள்ளது.டிடிவி தினகரனின் அமமுக கட்சிக்கு 2 தொகுதிகளும், ஜான்பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதியும் பாரிவேந்தரின் ஐஜேகே கட்சிக்கு ஒரு தொகுதி, புதிய நீதிக்கட்சிக்கு ஒரு தொகுதியும் வழங்கப்பட்டுள்ளன.ஜிகே வாசனின் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி மற்றும் முன்னாள் முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோருக்கு ஒதுக்கப்படும் தொகுதிகள் குறித்து இன்று அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது 

இந்நிலையில் ராம.சீனிவாசன் பாஜக வேட்பாளராக திருச்சியில் அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியானது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி சூர்யா X தள பதிவில், திருச்சி மாவட்டத்தை சேராத ராம சீனிவாசனை களமிறக்கினால், திருச்சியில் பாஜக டெபாசீட்டை இழக்கும். மாறாக மண்ணின் மைந்தரை களமிறக்கினால் பாஜகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது என பதிவிட்டு பரபரப்பை கிளப்பியுள்ளார்.இதன்மூலம் திருச்சி சூர்யா மறைமுகமாக தனக்கு சீட் கேட்கிறாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. 


 

Trending News

Latest News

You May Like